மஜக குமரி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்… மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்பு…

குமரி;ஏப்:27., கன்னியாகுமரி மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் சாதிக் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் காயல் சாகுல் ஹமீது, மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, அவர்கள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும், ஆம்புலன்ஸ் வாங்குவது குறித்தும், புதிய அலுவலகம் திறப்பு விழா, கிளை கட்டமைப்புகளை அதிகப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் சிறைவாசிகளை விடுதலை கோரி செப்டம்பர் 10. தலைமைச் செயலகம் முற்றுகை தொடர்பாக மாவட்ட மாநகர கிளை நிர்வாகிகளுடன் அதன் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிப் ரகுமான், அமீர்கான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அசரப் அலி, மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
25.04.2022