மத நல்லிணக்கத்தை வளர்க்க பாடுபடுவோம்! சத்தியமங்கலத்தில் மஜக இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாயி உரை…

ஏப்ரல் 24., மனிதநேய ஜனநாயக கட்சி ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிழ்ச்சி துணை பொதுச் செயலாளர் S.A.சையது அகமது ஃபாரூக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் A.Kஷானவாஸ், அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இணை பொதுச்செயலாளர் J.S.ரிஃபாயி, பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசியதாவது…

சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்று வரும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை பற்றி கவலையுடன் பேசினார்.

மேலும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு மதநல்லிணக்கத்தை வளர்க்க பாடுபட வேண்டும் என்றும் பேசினார்.

முன்னதாக ஜமாத் முத்தவல்லி ஹாஜி S.N நதிமுல்லாகான் சாகிப், திருமதி ஜானகி ராமசாமி, சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர்
திரு P.L.சுந்தரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Fr. D. மரியா ஜோசப், புனித அருளானந்தர் ஆலயம் சக்தி திரு S.N. ஜவஹர், மஜக மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்சா, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் A.ஷபிக், மேற்கு மாவட்ட பொருளாளர் பவானி சாதிக், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் அனைத்து சமூக தலைவர்களுக்கும் இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாயி, அவர்கள் சமூக நல்லிணக்க புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, பகுதி, கிளை, நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளானோர் கலந்து கொண்டனர்…

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
24-4-2022