ஏப்ரல்:17. மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் கறம்பக்குடி நகர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது மன்சூர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் நிர்வாக கட்டமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்வு உள்ளிட்டவைகளை குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் கூட்டத்தில் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் எதிர்வரும் 24/04/22 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் மதநல்லிணக்கம் போற்றும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, அவர்கள் நன்றியுரையாற்றினார்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
16.04.2022