செப்.10 தலைமைச் செயலகம் முற்றுகை! மஜக அறிவிப்பு..!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு மற்றும் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

இதில் தலைமை நிர்வாகிகள், சிறப்பு நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

கோவையில் ஜனவரி 7 அன்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் முன்விடுதலை செய்யக் கோரி மஜக சார்பில் கோவை சிறை முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.

அதில் தமிழக அரசு நியாயமான முடிவை மனிதநேயத்துடன் எடுக்க வேண்டும் என்றும், அடுத்த 100 நாட்களுக்கு இதற்காக காத்திருப்பது என்றும் கோவை பிரகடனம் மூலம் அறிவிக்கப்பட்டது.

இன்று அதன் 100-வது நாளில் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

அதில் இக்கோரிக்கையை வலியுறுத்தி அண்ணா பிறந்த நாளுக்கு முன்பாக செப்டம்பர் 10 அன்று, சென்னையில் தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்தை ஜனநாயக வழியில் முன் எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இதனையொட்டி ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள மே 14 அன்று தலைமை செயற்குழுவை சென்னையில் கூட்டுவது என்றும், மாவட்ட வாரியாக ஆயத்த பொதுக் குழுக்களை கூட்டுவது என்றும், பொதுமக்களை திரட்டும் பணிகளை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
18.04.2022