கன்னியாகுமரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட மஜகவினர்!

நவ:14., கன்னியாகுமரியில் கடும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு பொருட்கள் சுசிந்திரம் கற்காடு பகுதிகளில் வழங்கப்பட்டது.

கனமழையால் சுசீந்திரம் கற்காடு காலனி பகுதியில் திடீரென வெள்ளம் புகுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ், அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர்கள் முஜீப் ரகுமான், அமீர் கான் ஆகியோர் நள்ளிரவு 12 மணி அளவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட இடத்தை பார்த்து பார்வையிட்டு முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர் மேலும் இரவு உணவும் தயார் செய்து அனுப்பி வைத்தனர்.

மேலும் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையானவற்றை செய்து தர கோரிக்கை வைத்தனர்.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்ப்பு பணியாளர்களை சந்தித்து மீட்ப்பு பணி குறித்து கேட்டறிந்தனர்.

இப்பணியில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது அசரப் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகர பொருளாளர் ஐயப்பன், மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.

சுசிந்திரம் கற்காடு கிராம மக்கள் தங்கள் நன்றியை மனிதநேய ஜனநாயக கட்சியினருக்கு நன்றியை தெரிவித்தனர்

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
13.11.2021