சங்காரபுரத்தில் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு! அரசு வேலை வழங்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! மஜக மாநில துணைசெயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கண்டன உரை நிகழ்த்தினார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கோரமான வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கக்கோரியும், நிவாரண தொகையினை அதிகப்படுத்த கோரியும், விபத்துக்கு காரணமான அனைவரின் மீதும் விரைவாக நடவடிக்கை கோரியும் அனைத்து கட்சியின் சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி N.இப்ராஹிம், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் ஜாவித் , திருக் கோவிலூர் நகர செயலாளர் சாதிக் பாஷா, சங்கராபுரம் ஷேக் அப்துல்லா, கடலூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் சலீம் , மங்கலம் பேட்டை நகர செயலாளர் ரியா பரீத், மற்றும் திருக்கோவிலூர் மஜக வினர் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கள்ளக்குறிச்சி_மாவட்டம்
01.11.2021