NRK டெலிவரி உணவு வினியோக செயலி… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு.!

ஆகஸ்ட்.21, நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயலாளர் நிஜாம் அவர்களும், மாவட்ட மனிதநேய கலை இலக்கிய அணி செயலாளர் பத்தமடை கனி அவர்களும் இணைந்து NRK DELIVERY என்ற உணவு வினியோக செயலியை தொடங்கி உள்ளனர்.

இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, பால பிரஜாபதி அடிகளார், டாக்டர் சார்லஸ், ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

நெல்லையை சுற்றிலும் 20 கி.மீட்டர் சுற்றளவுக்கு செயலி மூலம் வீடுகளுக்கு வினியோக சேவை நடைபெறும் என்றும், தேவையான உணவை இதில் விண்ணப்பிக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் மஜக மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், பத்தமடை ஜமாத் தலைவர் மலுக்காமலி, நேசம் காலேஜ் ஆஃப் ஹெல்த் கல்லூரி இயக்குனர் ஹனிபா, சமூக ஆர்வலர் வழக்கறிஞர் அஹமது சாகிப் ஆகியோரும் வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், காயல் சாகுல், தலைமை செயற்குழு உறுப்பினர் தூத்துக்குடி ஜாஹிர், குமரி மாவட்ட செயலாளர் ஹபிஸ், தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் நஜீப், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் A1 மைதீன், முருகேசன், ஆதிமூலம், S.S.U.மைதீன், ஹபிபுல்லாஹ், அசன்கனி, சங்கரன் கோவில் பீர் உள்ளிட்ட மஜகவினரும் பங்கேற்றனர்.

Googleplaystore link.

https://play.google.com/store/apps/details?id=xyz.appmaker.ardyvm

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
20.08.2021