தோப்புத்துறையில் மஜக முன்னெடுத்த தடுப்பூசி முகாம்!

நாகை மாவட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்பட்டது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நீண்ட இம்முகாமில் ‘கோவீ சீல்ட்’ தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தடுப்பு மருந்தை செலுத்தி கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் முதல் டோஸ் போட வருகை தந்திருந்தனர்.

நீண்ட நாட்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் மஜக விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் நம்பிக்கையுடன் செலுத்தி கொள்ள பலர் முன் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மா.மீ அன்பரசு, வேதாரண்யம் வட்டார சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர் Dr. ராஜசேகர் மற்றும் மஜக மாவட்ட துணைச் செயலாளர் S.ஷேக் அகமதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் அ‌. ஷேக் மன்சூர், நகர செயலாளர் H.முகம்மது சரிபு, நிர்வாகிகள் A. அல்டாப் பாரக், S.இம்தியாஸ், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.