You are here

மஜக மருத்துவ சேவை அணிக்கு பாராட்டு.! பாராட்டு சான்றிதழை பெற்றார் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான்..!!

கொரோனா நோய் தொற்று பரவல் நேரத்தில் சென்னை மண்டலத்தில் மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களுக்கு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது.

கொரோனா நோய்த்தொற்று நேரங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது, இரத்த தானம், நோயாளிகளுக்கு படுக்கைகள் ஏற்பாடு, கொரோனாவால் இறந்த உடல்கள் அடக்கம் என பல்வேறு பணிகளை செய்து வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின், மருத்துவ சேவை அணிக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மருத்துவமனை இயக்குனர் எழிலரசி அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்க, மஜக மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் அதை பெற்றுக்கொண்டார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
15.08.2021

Top