கோவை மாநகர காவல் துறை ஆணையருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!

ஜுன்.14.,

கோவையில் புதிதாக பொறுப்பேற்ற மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இச்சந்திப்பில் கோவையில் மஜக ஆற்றி வரும் கொரோனா தடுப்பு, மற்றும் நிவாரண பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் காவல் துறை ஆணையர் கேட்டறிந்தார்.

மேலும் கோவையில் சில பகுதிகளில் இளைஞர்களை சீரழிக்கும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை ஆணையர் தெரிவித்தார்.

முன்னதாக சுகாதார பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர், ராஜகோபால் சுங்கரா, அவர்களையும், உளவுத்துறை உதவி ஆணையர் முருகவேல், உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகளை மஜக நிர்வாகிகள் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இதில் மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பைசல் ரஹ்மான், ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
14.06.2021