தென்காசி.ஏப்ரல்.13.,
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டு செல்கிறது.
அதை தொடர்ந்து தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்க வசங்கள், மாவட்ட செயலாளர் M.பீர்மைதின் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஆதம்பின் ஹனிபா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் சிலம்பாட்ட சாகுல் தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை விநியோகித்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
13.04.2021