சென்னையில் மஜக இல்ல திருமணவிழா..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!!


சென்னை.மார்ச்.01

மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்டப் பொருளாளர் புதுபேட்டை T.M.யூசுப் அவர்களின் இல்ல திருமண விழா எழும்பூர் ஹோட்டல் இம்பீரியல் காம்ப்ளக்ஸ் FAIZ MAHAL-ல் சிறப்பாக நடைபெற்றது.

மணமகன் B.முஹம்மது ரஸ்வி மற்றும் மணமகள் S.நூர் ஷாஹின்ஷா ஆகியோருக்கு நடைபெற்ற இத்திருமண நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் இத்திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற பொருளாளர் அவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

மேலும் இத்திருமண விழாவில் அவைத் தலைவர் நாசர் உமரி, துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர்கள் புதுமடம் அனிஸ், திருமங்கலம் ஷமீம் அகமது, பொறியாளர் முஹம்மது சைபுல்லாஹ், மாநில இளைஞரணி செயலாளர் முஹம்மது அசாருதீன், வர்த்தக அணி மாநில துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, தொழிற்சங்க மாநில பொருளாளர் இக்பால், மருத்துவ அணி மாநில துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான், மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர் ரவுப் ரஹீம், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யூம், திருவல்லிக்கேணி பகுதி துறைமுகம் பகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு
01-03-2021