சமூக நல்லிணக்க மேடையாக மாறியது மஜகவின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்!


மார்ச்.01,

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மிகுந்த பேரெழுச்சியோடு‌ நாகர்கோவில்- கோட்டாரில் நடந்து முடிந்தது.

கட்சி குறுகிய காலத்தில் எல்லா இடங்களிலும் வளர்ந்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இவ்வாண்டு கன்னியாகுமரி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த முடிவு பெரும் நம்பிக்கையை தந்திருக்கிறது. பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வாக இது வெற்றிக்கரமாக நடந்தேறியுள்ளது.

ராட்சத விளக்குகள், ஒளித்திரை அமைக்கப்பட்டு மேடை வண்ணமயமாக காட்சியளித்தது.

7 மணிக்கெல்லாம் கூட்டம் நிறைந்து, சாலையோரம் மக்கள் நிற்கத் தொடங்கினர். பெண்கள் பகுதியிலும் கூட்டம் திரண்டிருந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த வாகனங்கள் அருகில் உள்ள திடலை நோக்கி அனுப்பப்பட்டன.

மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார், கிறிஸ்த்தவ ஜனநாயக பேரவை தலைவர் சுரேஷ் கானி, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, வழிக்கறிஞர் அகமது சாகிப் ஆகியோர் வருகை தந்து தமிழின உணர்வுடன் ,சமூக நல்லிணக்கம் ஓங்கும் வகையில் உரையாற்றினர்.

மஜகவின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா என்பது சமூக நல்லிணக்க மேடையாக பலராலும் பாராட்ட பெற்றது.

மாநிலச் செயலாளர்கள் நாச்சிகுளம். தாஜ்தீன், சீனி முகம்மது, மாநில துணைச் செயலாளர்கள் ஷமீம் அஹமது, நாகை முபாரக் ஆகியோர் கட்சியின் எழுச்சியையும், வளர்ச்சியையும் எடுத்துரைத்தனர்.

துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா அவர்கள் பாஜகவின் மக்கள் விரோத அரசியலை சாடினார்.
துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்கள் உருக்கமாக பேசி தொண்டர்களை வசீகரித்தார்.

நேரமற்ற நெருக்கடியில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களும், பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களும் குறைவாக பேசினார்.

தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில நிர்வாகிகள் ஹமீது ஜெகபர், தாரிக், சம்சுதீன் ஆகியோர் நிகழ்ச்சிகளை நேரலை செய்தும், படங்களை எடுத்தும் திட்டமிட்டு செயலாற்றினர்.

இதில் மாநில துணை செயலாளர் பாபு ஷாகின்ஷா உள்பட தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க, மாவட்ட பொறுப்பாளரான மாநில துணைச் செயலாளர் காயல்.சாகுல் தலைமையில் மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபீஸ், பொருளாளர் சாதிக் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிக்கர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜீப் ரஹ்மான், அமீர் கான் மற்றும் மாவட்ட அணி, ஒன்றிய, நகர, கிளை மஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கன்னியாக்குமரி_மாவட்டம்.
28.02.2021