பிப்.28,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காலை முதலே நகரின் அனைத்து மஜக கொடிக்கம்பங்களில் கொடியேற்றபட்டன.
தொடர்ந்து மரம் நடப்பட்டது.
பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.
பிறகு வீரபாண்டியபட்டினத்தில் உள்ள கருணாலயா ஆதரவற்றோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அனைத்து நிகழ்வுகளிலும் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது நஜிப், ராசுக்குட்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது சபிர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், காயல்பட்டினம் நகர செயலாளர் இப்னுமாஜா, நகர நிர்வாகிகள், மீரான், சிக்கந்தர் பாட்சா, அப்துர் ரஹ்மான், முஜிபுர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்.