ஜன.13,
விழுப்புரத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியும், கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு மஜக கொடியை ஏற்றி வைத்து மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று மஜக அட்டைகளை மாநில பொருளாளர் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், பொருளாளர் செளகத் அலி , மாவட்ட துணைச் செயலாளர் செஞ்சி பைரோஸ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அக்பர், விழுப்புரம் நகர பொருளாளர் ஜாபர் சேட், நகர துணைச்செயலாளர்கள் அஸ்மத்துல்லாஹ், பாரி , ஜபருல்லாஹ் , நகர MJVS மன்சூர் அலி, நகர MJTS நசீர், செஞ்சி அப்பம்பட்டு கிளை செயலாளர் ஜஹாங்கீர், புளியம்பட்டு கிளை செயலாளர் முபாரக், விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் அப்பாஸ், கள்ளக்குறிச்சி பள்ளிவாசல் ஜமாத் தலைவர்கள், திருக்கோயிலூர் நகர செயலாளர் சாதிக் பாட்ஷா உள்பட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#விழுப்புரம்_மாவட்டம்.