டிச.04,
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க கடலூர் மாவட்டம் வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் ஆயங்குடிக்கு வருகை தந்திருந்தார்.
அவரை ஆயங்குடி பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் மாலிக் மற்றும் ஜமாத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர்.
தொடர்ந்து ஆயங்குடி மஜக பேரிடர் மீட்பு குழுவினரின் பணிகளை கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் நகர நிர்வாகிகள் புருஹானுதீன், சாதுல்லா (ஊராட்சி வார்டு உறுப்பினர்), அன்வர்தீன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
இங்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை மஜக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தாயகம் வருகை புரிந்துள்ள MKP கத்தார் மண்டல செயலாளர் யாசின் இல்லத்திற்கு பொருளாளர் வருகை தந்தார்.
இந்நிகழ்வுகளில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், பொருளாளரும், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவருமான A.S பஜில் முஹம்மது, மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.
03/12/2020