ராஜபாளையத்தில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை ஏற்பாடு செய்த மஜக


ஜூன்12,
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக,
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் இன்று தொடங்கியது.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக இப்பதிவு முகாம் தொடர்ந்து 22.06.2020 வரையில் பத்து நாட்கள் முன்னெடுக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் இன்று மட்டும் சுமார் 60 நபர்கள் பதிவு செய்தனர்.

சுமார் 600 நபர்கள் வரை வாரிய உறுப்பினராக இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உறுப்பினராக இணைவதன் மூலம் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கொரோனா கட்டுபாடுகள் தளர்வுக்கு பின் முறையாக பதிவு செய்யப்பட்டு உறுப்பினர் அட்டையை பெற்று தருவதற்கான முயற்சிகளை மஜக முன்னின்று செய்ய உள்ளது.

மேலும், இடைத்தரகர்கள் மூலம் எளியமக்களிடம், ஐநூறு ரூபாய் வரை பெற்றுக் கொண்டு உறுப்பினர் அட்டை வழங்கி வரும் சூழலில் முற்றிலும் இலவசமாக மஜக முன்னெடுத்து வரும் இச்சேவை அனைத்து தரப்பினாலும் பாராட்டப்படுகிறது.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விருதுநகர்_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*