சிறைவாசிகள் விடுதலை… உற்சாகமாக களமாடிய மஜக!

மே 31,


10 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மதம், வழக்கு பாராமல் முன் விடுதலை செய்யக் கோரி இன்று (31-05-2020) தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தி அதை சமூக இணையங்களில் பதிவிட்டு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த மே மாதத்தில் மட்டும் ஊரடங்கு நெருக்கடிகளை கடந்து காவிரி உரிமை, ஈழத் தமிழர் உரிமை ஆகியவற்றுக்காகவும் களமாடி, இன்று ஆயுள் தண்டனை கைதிகளின் முன் விடுதலைக்காகவும் போராடியது தமிழக அரசியல் அரங்கில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் துளசியாப்பட்டினத்திலும், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர் அவர்கள் இளையான்குடியிலும், இணைப் பொதுச்செயலாளர் JS .ரிபாயி ரஷாதி அவர்கள் மேலப்பாளையத்திலும், துணைப் பொதுச்செயலாளர்கள் ஈரோடு பாரூக் அவர்கள் சத்தியமங்கலத்திலும், மன்னை செல்லச்சாமி அவர்கள் மதுரையிலும், மண்டலம் ஜெய்னுல் ஆபீதின் அவர்கள் தொண்டியிலும், கோவை சுல்தான் அமீர் அவர்கள் கோவையிலும், தைமிய்யா அவர்கள் சென்னை தலைமையகம் அருகிலும், மாநிலச் செயலாளர்கள் தாஜூதீன் அவர்கள் நாச்சிக்குளத்திலும், ராசுதீன் அவர்கள் திருபுவனத்திலும் பங்கேற்றனர்.

மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அணீஸ் அவர்கள் சென்னையிலும்,
பொறியாளர் ஷைபுல்லா அவர்கள் இளையான்குடியிலும், ஷஃபி அவர்கள் சென்னையிலும், நாகை முபாரக் அவர்கள் நாகூரிலும், துரைமுகம்மது அவர்கள் புதுக்கோட்டையிலும், அப்சர் செய்யத் சென்னையிலும், இப்ராஹிம் அவர்கள் நெய்வேலி மந்தாரக்குப்பத்திலும்,
சாகுல் ஹமீது அவர்கள் நெல்லை மேலப்பாளையத்திலும் பங்கேற்றனர்.

மேலும் மஜக-வினர் தமிழகமெங்கும் பரவலாக அணிவகுப்போடு 175-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைப்பாகவும், இதர இடங்களில் தனி தனியாகவும் பதாகை ஏந்தி சமூக வலைதளங்களில் பதிவேற்றியது குறிப்பிடத்தக்கது.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்.
31-05-2020