மஜக தலைமையக செய்தி‬…

35 நாட்களில் சாதனை பயணம்!

அன்புக்குரிய மனிதநேய சொந்தங்களே…! ஏக இறைவனின் அமைதியும், சமாதானமும் உரித்தாகுக !

இறைவனுடைய அருளால் கட்சி ஆரம்பித்த 26 நாட்களில் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். அதனைத்தொடர்ந்து கட்சி ஆரம்பித்த 35 வது நாளில் தமிழகத்தின் முதல் பெரும் கட்சியான அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு தொகுதிகளும் ஜனரஞ்சகமான தொகுதிகள் குறிப்பிட்ட மக்களுக்கான கட்சி என்ற தோற்றம் மாறி எல்லா சமூக மக்களும் ஆதரிக்கும் ஒரு கட்சி என்ற நிலையை எட்டும் வகையிலும், அனைவருக்கும் அதை உணர்த்தும் வகையிலும் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இது மற்றதொரு சிறப்பாகும்.

கூட்டணிக் கட்சிகளில் புதிய கட்சியான ம.ஜ.க.வுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாப்புகழும் இறைவனுக்கே !

இதற்காக தமிழக முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான டாக்டர். அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊடக நண்பர்கள் மற்றும் சமூக இணையதள செயல்பாட்டாளர்கள் மூலம் கட்சி பட்டித் தொட்டியெங்கும் சென்று சேர்ந்திருக்கிறது.

இந்நிலையில் நமது கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அடுத்தநாளே, தமிழகத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் பதிவுக் கிடைத்தால் மட்டுமே தனிச்சின்னம் என்பது நடைமுறை சாத்தியமாகும். இல்லையெனில் சுயேட்சை என்ற பெயரிலேயே நமது சின்னம் அறிவிக்கப்படும். இதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக ஆலோசித்தோம்.

இது குறித்து கடந்த 1 வார காலமாக பல முயற்சிகள் செய்தும் தேர்தல் ஆணைய பதிவு கிடைப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் பரப்புரைக்கு தயாராகி விட்டனர். எனவே, இந்த இக்கட்டான நிலையில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவது தான் அரசியல் புத்திசாலித்தனம் என்று அபிமானிகளும், அரசியல் வல்லுனர்கலும் நல்லெண்ணத்தோடு கருத்துகளை கூறினர். இதன் சாதக பாதகங்கல் குறித்து நிதானமாக தலைமை நிர்வாகக் குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் புதிய கட்சிக்கு சட்டமன்ற அங்கீகாரமும், மக்கள் அங்கீகாரமும் கிடைப்பதற்கு இப்போதைக்கு இதைத்தவிர வேறு வழியில்லை என்ற யதார்த்தத்தை புரிந்துக்கொண்டு, இம்முறை மட்டும் இந்த நிலைப்பாட்டில் பயணிப்பது என்றும், தேர்தல் ஆணைய பதிவு கிடைத்தப்பிறகு எதிர்வரும் தேர்தல்களில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவது என்ற கொள்கை முடிவை தலைமை நிர்வாகக் குழு எடுத்திருக்கிறது. அனைத்திற்கும் இறைவன் போதுமானவன்.

மேலும் ம.ஜ.க.வின் வேட்பாளர்கள் யார் என்பது புதன்கிழமை கூடும் தலைமை செயற்குழுவில் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

எனவே மனிதநேய சொந்தங்களும், பொதுமக்களும் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெற்றிப்பயணத்திற்கும், மேலும் 232 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்து, இறைவனிடம் பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தியாகங்களை ஒழிக்க முடியாது, உழைப்பை அழிக்க முடியாது.

நீதியை புதைக்கமுடியாது. சிலர் எங்களை அழிக்க நினைத்தார்கள்.

‪#‎இறைவன்_எங்களை_விதைக்க_நினைக்கிறான்‬.

‪#‎இறைவன்_பெரியவன்‬. ‪#‎அவனே_அனைத்திற்கும்_தலைவன்‬.

இவண்

M.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
04-04-2016
www.facebook.com/mjkparty