மஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..!

சென்னை.நவ.10.., மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல ஆலோசனைக்கூட்டம் கட்சியின் இணை பொதுச் செயலாளரும் டிசம்பர் 6 போராட்ட ஒருங்கிணைப்பாளருமான J.S ரிபாய் அவர்கள் தலைமையில் 9.11.2018 அன்று மாலை நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் மஜக சார்பாக நடக்க இருக்கும் டிசம்பர்

6 விமான நிலைய முற்றுகை போராட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை மாநில நிர்வாகிகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் வட சென்னை (கிழக்கு & மேற்கு) மத்தியசென்னை (மேற்கு & கிழக்கு) தென்சென்னை (கிழக்கு & மேற்கு) திருவள்ளூர் ( கிழக்கு & மேற்கு) காஞ்சி (வடக்கு & தெற்கு) ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டர்கள்.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
சென்னை மண்டலம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*