மஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு..! அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு!

காஞ்சி.நவ.5.., காஞ்சி வடக்கு மாவட்டம் பம்மல் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு 04-11-2018 அன்று மாலை பம்மல் ஜமால் பேலஸ் மண்டபத்தில், மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் முஹம்மது யாகூப் தலைமையில் நடைபெற்றது.

இப்பொதுக்குழுவில் கட்சியின் பம்மல் நகரம் மற்றும் 15, 16, 17, 21 ஆகிய வார்டுகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக மஜக அவைத்தலைவர் S.S. நாசர் உமரி, மனிதஉரிமைகள் அணி மாநில செயலாளர் ஜிந்தா மதார், மனிதநேய தொழிற்சங்க மாநில தலைவர் பம்மல் சலீம், ஆகியோர் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி குறித்தும். புதிய நிர்வாகிகள் செய்யவேண்டிய கடமைகள் பற்றியும். டிசம்பர் 6 போராட்ட முன்னெடுப்புகள் பற்றியும் எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.

அப்பகுதியில் உருது மொழி பேசுபவர்கள் பெருவாரியாக கட்சியில் இருப்பதால் S.S நாசர் உமரி அவர்கள் உருது மொழியில் எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக வரும் 9-11-2018 அன்று மத்திய சென்னை மாவட்டம் சார்பாக நடக்க இருக்கும் வக்ப் வாரிய அலுவலகம் முற்றுக்கையில் பெருந்திரளாக கலந்து கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது.

பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பம்மல் செளக்கத், தாம்பரம் ஜாகிர், தி

ல்சாத், ஆலந்தூர் சலீம், பம்மல் காதர், பல்லாவரம் நகரச் செயலாளர் ஷாநவாஸ், கண்டோன்மெண்ட் அப்துல் சமது, உட்பட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பொதுக்குழுவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவண்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#காஞ்சி_வடக்கு_மாவட்டம்
5-11-2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*