வரலாறு போற்றும் முடிவை தமிழக அமைச்சரவை எடுத்திருக்கிறது..! மஜக உற்சாக வரவேற்பு!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..)

முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 27 ஆண்டு காலம் சிறையில் வாடும் #பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, முன் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்து, தமிழக கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது வரலாறு போற்றும் முடிவாகும். ஈரம் சொட்டும் வார்த்தைகளோடு எமது நன்றிகளை இதில் ஈடுபட்ட அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்

இதற்கு காரணமான மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி யார் அவர்களையும், அவரது தலைமையிலான அமைச்சரவையையும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார வாழ்த்தி பாராட்டுகிறோம்.

இது மஜகவின் கொள்கை வழி ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதி மகிழ்கிறோம்.

இக்கோரிக்கையை கடந்த இரண்டாண்டு .காலமாக சட்டமன்றத்தில் நானும், தோழர்.தனியரசு, மற்றும் தோழர் கருணாசு அவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். இதற்காக முதல்வர் அவர்களையும், சிறைத்துறை அமைச்சர் CV .சண்முகம் உள்ளிட்ட பல அமைச்சர்களையும் பல முறை சந்தித்து வலியுறுத்தி வந்தோம்.

இன்று அவர்களின் சிறைக்கதவுக்கு அருகே நீதியின் தென்றல் காற்று நெருங்கி வந்திருக்கிறது.

அமைச்சரவையின் முடிவை ஏற்று,அந்த பரிந்துரையை அமல்படுத்துவது தான் கவர்னின் கடமையாகும். அதை அவர் செவ்வனே செய்வார் என நம்புகிறோம்.

மத்திய அரசு இவ்விஷயத்தில் மனிதாபிமானத்தோடு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச் செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
09.09.18

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.