பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போர்..மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போர்..மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு

மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை :

நாட்டின் பன்முக கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில், மதவாத அரசியலை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்து வருகிறார்.அதன் ஒரு பகுதியாக முஸ்லீம் சமுதாயத்தின் உள் விவகாரங்களில் தலையிடும் போக்கை மத்திய சட்ட ஆணையம் தொடங்கிருக்கிறது.தலாக் விவகாரத்தில் கருத்தறியும் நடவடிக்கை என்ற பெயரில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதற்கு முன்னோட்டம் பார்க்கிறார்கள்.

இது காந்தியின் கனவு தேசத்தை சுக்குநூறாக்கும் முயற்சியாகும்.எனவே இந்த அநீதியான போக்கை கண்டித்து பல்வேறு சட்ட பரப்புரைகளை மனிதநேய ஜனநாயக கட்சி சமூக நீதி மற்றும் மதசார்பற்ற சக்திகளோடு இணைந்து முன்னெடுக்கும்.

அந்த வகையில் எதிர் வரும் 21.10.2016 முதல் 4.11.2016 வரை கையெழுத்து இயக்கத்தை மஜக நடத்தவிருக்கிறது.

இதன் மூலம் பல தரப்பு மக்களையும் சந்தித்து மத்திய அரசின் கபட நாடகத்தை தோலுரிக்கும் பணியை தொடங்குகிறோம்.

லட்சக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற்று,அதன் நிறைவாக சென்னையில் 4.11.2016 அன்று #பிரம்மாண்டமான_பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பிரகடனம் வெளியிடப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும்,வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் பெறப்படும் கையெழுத்துக்கள் அகில இந்திய முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவண்:-
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
20_10_16

குறிப்பு : கையெழுத்து இயக்க படிவங்களை www.mjkparty.com என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.