மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் நேற்று இரவு (15.02.2023) காணொளி வழியே நடைப்பெற்றது. பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் செய்யது முகம்மது பாரூக், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, நாச்சிக்குளம். தாஜுதீன், மாநிலச் செயலாளர்கள் நாகை. முபாரக், பல்லாவரம் ஷஃபி, கோவை ஜாபர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு... 1. தலைமை நிர்வாகக்குழுவில் காலியாக உள்ள பொறுப்புகள் கீழ்கண்டவாறு பொதுச் செயலாளர் ஒப்புதலுடன் நிரப்பப்படுகிறது. பொருளாளர்: மௌலா. நாசர் தலைமை ஒருங்கிணைப்பாளர்: செய்யது முகம்மது பாரூக் அவைத் தலைவர்: மன்னை செல்லச்சாமி 2. தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் கீழ்க்கண்ட 3 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். (i) அறந்தாங்கி முபாரக் (ii) நாகை. சதக்கத்துல்லாஹ் (iii) ஒசூர் நெளஷாத் 3. மதவெறி சக்திகள் வலிமைப் பெற்றிருக்கும் இக்கால கட்டத்தில் சமூகத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் உருவாக்குவது பெரும் குற்றம் என இக் கூட்டம் கருதுகிறது. அத்தகைய காரியங்களில் ஈடுபடுபவர்களை நோக்கி கவலையுடன் இச்செய்தியை சுட்டிக்காட்டுகிறது. 2. கடந்த 07.02.2023 அன்று தஞ்சாவூரில் நடைப்பெற்ற அவசர செயற்குழுவை தொடர்ந்து, சிறப்பு நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டு,
Month:
மஜக திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!
திருச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் S.அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளர் அகமது கபீர் ஆகியோர் பொதுச் செயலாளருடன் உடன் இருந்தனர். இதில் "மக்களுடன் மஜக" பணிகள் குறித்து பேசப்பட்டது. எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்று நிகழ்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட பொருளாளர் A.பக்கீர் மொய்தீன் (பாபு பாய்), துணைச் செயலாளர்கள், M. சையது முஸ்தபா, அரியமங்கலம் s.ஜமாலுதீன், மைதீன், MJTS மாவட்ட தலைவர் M.ஷேக் அப்துல்லா, MJTS பொருளாளர் k.அன்வர் பாட்ஷா, MJTS துணைச் செயலாளர் s.சையது முகம்மது, ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன், IT WING பொறுப்பாளர் திருச்சி சேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோயில்களுக்கு இடையே நடைப்பாதை அமைக்க கோரி…
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் "மக்களுடன் மஜக" என்ற செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் வேதராண்யம், தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லா (ஆம்ஸ்) தலைமையில் நிர்வாகிகள் நெடுஞ்சாலை உதவி பொறியாளரை சந்தித்தனர். இச்சந்திப்பில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் கோவிலுக்கும், ஆஞ்சநேயர் கோவிலுக்கும் இடையே நடைப்பாதை அமைத்து தர கோரி மனு அளித்தனர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் மற்றும் பேமஸ் சிவகுமார், மற்றும் கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சுல்தான்பேட்டையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தீவிர பரப்புரை!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அவருடன் துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செய்யது அகமது பாருக், மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு துணை தலைவருமான பாபு ஷாகின்ஷா ஆகியோரும் பங்கேற்றனர், சுல்தான் பேட்டை பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் பெரியார் குடும்பத்து பேரனுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்றும் கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட மஜக-வினர் கொடிகளுடன் பரப்புரையில் சுற்றி வந்தனர். மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சபிக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநவாஸ், சேலம் மாவட்ட செயலாளர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கொடிவேரி சாதிக், பொதக்குடி ஜெய்னூதீன், கருர் மாவட்ட துணை செயலாளர் உவைஸ் அஹமது, மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஜாகீர், IT WING மண்டல செயலாளர் எஹ்சானுல்லா மற்றும் மாவட்ட iT WING பாசித்
மக்கள் நல கோரிக்கைகளுடன் திருநெல்வேலி மாநகராட்சி மேயரை சந்தித்த மஜகவினர்.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் "மக்களுடன் மஜக" என்ற செயல் திட்டத்தின் கீழ் பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையிலான நிர்வாகிகள் இன்று திருநெல்வேலி மாநகராட்சி மேயரை சந்தித்தனர். இச்சந்திப்பில் நெல்லை மாநகராட்சி சீர்மிகு நகரம் என்ற திட்டத்தின் மூலம் நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய பணியை விரைத்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளது உள்ளிட்ட பல மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் மன்சூர் அலி, மஜக நிர்வாகிகள் முகம்மது மூசா, பேசர் அலி, திரு.முருகேசன், சம்சுதீன், அஸ்ரப் அலி, பாலமுருகன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.