ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று 17.02.2023 வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்குப் பிறகு (ஜூம்மா) சுல்தான்பேட்டை பள்ளியில் மஜக சார்பில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குசேகரித்தனர். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு துணை தலைவருமான பாபு ஷாகின்ஷா, மாவட்ட செயலாளர் A.ஷபீக் அலி, மாவட்ட பொருளாளர் பாபு மாவட்ட துணை செயலாளர் பக்கீர் முகமது, மாவட்ட தொழிற்சங்க தலைவர் A.சபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் S.பாசித், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் ஹாரிஸ், சுல்தான் பேட்டை கிளை செயலாளர் ரஹ்மான், சித்திக், முபாரக் உள்ளிட்ட திரளான மஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Month:
தலைமையகத்தில் மத்தியசென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ் கான் தலைமையில் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க நிகழ்வை முன்னிட்டு இரு மாவட்டங்களிலும் கொடியேற்று நிகழ்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் உடன் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணை செயலாளர் அஸாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாரிக், இளைஞரணி பொருளாளர் முகமது பைசல், ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் காஜா மைதீன், மற்றும் மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மஜகவில் இணைந்த மமக மாவட்ட துணை செயலாளர்.!
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மமக மாவட்ட துணை செயலாளர் ஜமீர் கான் மற்றும் சுல்தான் பேட் சபி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் சேவைகளால் ஈர்க்கப்பட்டு தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் தங்களை மஜக-வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அமீன் சிக்கந்தர், மாவட்ட பொருளாளர் சையத் நவாஸ், மாநகர செயலாளர் முஹம்மத் உமர், மாவட்ட மருத்துவரணி செயலாளர் மஹபூப் பாஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷெரீப், மாநகர பொருளாளர் சாகிப், அன்சர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தலைமையகத்தில் திருவள்ளூர் கிழக்கு மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநில தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க நிகழ்வை முன்னிட்டு இரு மாவட்டங்களிலும் கொடியேற்று நிகழ்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் உடன் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணைச்செயலாளர்கள் நெய்வேலி இப்ராஹிம், அஸாருதீன், மாணவர் இந்திய தலைவர் பஷீர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாரிக், மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான், இளைஞரணி பொருளாளர் முகமது பைசல், MJTS மாநில துணை செயலாளர் மாத்தூர் இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M. நாசர், மேற்கு மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், கிழக்கு மாவட்ட பொருளாளர் முகம்மது ஜாபர், துணை செயலாளர்கள் நிஜாம் பாய், அன்சர், அணி செயலாளர் அப்ரார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் P.M.பஷீர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரை சந்தித்து மஜகவினர் மனு..!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் "மக்களுடன் மஜக" என்ற திட்டத்தின் கீழ் பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது அதன் ஒரு நிகழ்வாக மஜக திருச்சி மாவட்ட செயலாளர் S. அந்தோணி ராஜ் அவர்கள் தலைமையில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் D.நேரு அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது தாய்சேய் நலப் பிரிவு பகுதிகளில் சுகாதாரம் குறித்தும், நோயாளிகளுக்கு வெண்ணீர் சரிவர வழங்காததை மருத்துவர் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கை மனுவை மஜகவினர் அளித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பக்கீர் மொய்தீன் பாபு பாய், மாவட்ட செயலாளர்கள் சையது முஸ்தபா, ஜமாலுதீன், மைதீன்,Mjts.தலைவர் ஷேக் அப்துல்லா,k.அன்வர் பாட்ஷா, சையது முகமது, ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன், மற்றும் உடனிருந்தனர்.