இந்திய சுதந்திர பவள விழா.. ▪️ மஜக முழக்கங்கள் ▪️ 1. வாழ்க, வாழ்க, வாழ்கவே... . இந்திய தேசம் வாழ்கவே 2. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்... . சுதந்திர தின வாழ்த்துக்கள் 3. ஒன்றுபடுவோம், ஒன்றுபடுவோம் . தேசம் காக்க ஒன்றுபடுவோம் 4. அணி திரள்வோம், அணி திரள்வோம் . ஜனநாயகம் காக்க அணி திரள்வோம் 5. வளர்த்தெடுப்போம், வளர்த்தெடுப்போம் . நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்போம் 6. நினைவு கூர்வோம், நினைவு கூர்வோம் . சுதந்திரப் போரின் தியாகிகளை . நினைவு கூர்வோம், நினைவு கூர்வோம் 6. காந்தியும், நேருவும்.... கட்டிக்காத்த லட்சியத்தை... . காத்திடுவோம், காத்திடுவோம் 7. பவள விழா கொண்டாடும்... இந்தியாவின் சுதந்திரத்தை... பேணிக் காக்க உறுதியேற்போம்... 8. நேதாஜியும், சிராஜித் தெளலாவும்... . பகதூர்ஷாவும், பகத்சிங்கும்... . எண்ணற்ற போராளிகளும்... . ஈன்றெடுத்த விடுதலையை... . கொண்டாடுவோம், கொண்டாடுவோம்
Month:
மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்களுடன்!! தென்காசி மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!
ஆக;01., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களை தென்காசி மாவட்ட மஜக நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் வருகின்ற செப்டம்பர் 10 அன்று ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலைக்காக சென்னையில் நடைபெற உள்ள தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு மக்களை திரட்டுவது, உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு மாநில பொருளாளர் ஆலோசனைகளை வழங்கினார். மேலும் தென்காசி மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 31.07.2022