மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை! இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகின் சிறந்ததொரு வழிகாட்டியாக பல தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார். 14 நூற்றாண்டுகளை கடந்தும் அவரது இறைச் செய்திகளும், அறிவுரைகளும் அன்றாடம் உயிர் துடிப்போடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவரது ஆளுமை என்பது காலங்களை கடந்து வரலாற்றை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அதனால்தான் முஸ்லிம்கள் மட்டுமின்றி பல சமூக மக்களும் போற்றும் தலைவராக அவர் மதிக்கப்படுகிறார். அவ்வப்போது சகிப்புத்தன்மையற்றவர்களும், புரிதலற்றவர்களும் அவர் முன் வைத்த கொள்கைகளையும், அவரையும் காயப்படுத்தும் போதெல்லாம் உலகம் அதிர்கிறது . சமீப காலமாக நமது நாட்டில் காவி வலதுசாரி சக்திகள் வெறுப்பு அரசியலை வேகமாக வளர்த்து வரும் நிலையில், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா என்பவர் நபிகள் நாயகத்தை திட்டமிட்டு அவதூறு செய்திருக்கிறார். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக, எதைப் பேசினாலும் காப்பாற்றுவதற்கு அதிகார வர்க்கம் துணைபுரியும் என்ற துணிச்சலில்தான் இப்படிப்பட்ட பேச்சுகள் வெளிப்படுகின்றன. ஒன்றிய அரசை ஆளும் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் விஷமப் பேச்சு, உலகின் பல நாடுகளால் கண்டிக்கப்பட்டிருக்கும்
Month:
உண்ணாவிரத போராட்டம்.! மஜக துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு..!
சென்னை.ஜூன்.05., 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக் கோரி சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டியக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் கௌஸ், ஜல்லிக்கட்டு ஜலீல் ஆகியோர் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் மஜக துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பங்கேற்று கருணை அடிப்படையில் 25 வருடங்களை கடந்த சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். உடன் மஜக மாநில துணைச்செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர் அஹமது அவர்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #சென்னை_மாவட்டம் 05.06.2022
அதிரை நகர செயலாளர் ஹாஜா மர்ஜூக் இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது பங்கேற்பு…!!
ஜூன்:05, மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர செயலாளர் ஹாஜா மர்ஜூக் அவர்களின் இல்ல திருமண விழா அதிரையில் நடைபெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் ராவுத்தர் ஷா , நாச்சிக்குளம் தாஜுதீன் , தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 05.06.2022
திண்டுக்கல்லில் மரைக்காயர்சேட் இல்ல திருமண விழா! மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது பங்கேற்பு!
ஜூன்:02., திண்டுக்கல்லில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் அவர்கள் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி சாந்து முகமது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சர்புதீன், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ஹனீபா, பழனி நகர செயலாளர் சையது பாபு, இளைஞரணி நகர செயலாளர் இஸ்மாயில், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திண்டுக்கல்_மாவட்டம் 01.06.2022