புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கல்லணைக் கால்வாய் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்துரை ஆர்ப்பாட்ட முழக்கமிட்டு துவக்கி வைத்தார். டெல்லியில் 9 மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், கொள்கைபரப்பு மாவட்ட செயலாளர் ஷாஜஹான், தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பகுருதீன் மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பொறுப்பாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் 27.09.2021 #IStandWithFarmers #MjkStandWithFarmers
Month:
பெரம்பலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம்! மஜகவினர் பங்கேற்பு!
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் (பாரத் பந்த்) அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (MJK) மாவட்ட துணைச்செயலாளர் ஜஹாங்கீர் பாஷா தலைமையில் நகர நிர்வாகி செய்யது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 6 மணியளவில் விடுதலையாகினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #பெரம்பலூர்_மாவட்டம் 27.09.2021 #IStandWithFarmers #MjkStandWithFarmers
மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
ஒன்றிய அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு நிகழ்வாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் சார்பாக கோட்டைப்பட்டிணம் செக்போஸ்டில் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் சாஜிதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் சுபைர்கான் முன்னிலை வகித்தனர். இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் ஹத்தாப், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் வசீம் அக்ரம், தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் தனபால், கிளை செயலாளர் தாஜ்தீன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தமீம் அன்சாரி, மருத்துவ சேவை அணி ஒன்றிய செயலாளர் ஜவாஹிர்தீன், இளைஞரணி கிளை செயலாளர் ஷமீம், இளைஞரணி கிளை துணை செயலாளர் பாஷில், மாஸ்டர் இத்ரீஸ்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து
பொள்ளாச்சி விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்..!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு நிகழ்வாக மஜக கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரம் சார்பாக நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் மாநில செயலாளர் லேனா இசாக், அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர் பதுருதீன், மற்றும் மாவட்ட, நகர, வார்டு, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றிய, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #பொள்ளாச்சி_நகரம் #கோவை_மாவட்டம் 27.09.2021
திருக்கோவிலூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்! மஜகவினர் திரளாக பங்கேற்பு!
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து திருக்கோவிலூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மஜக மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் s.ஜாவித் அவர்கள் தலைமை தாங்கி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார். மேலும் தோழமை கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருக்கோவிலூர் நகர செயலாளர் s.சாதிக் பாஷா மற்றும் நகர பொருளாளர் B. ஜாகீர்உசேன் மற்றும் நகர துணை நிர்வாகிகள், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டங்களை பதிவு செய்தனர். #IStandWithFarmers #MjkStandWithFarmers தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கள்ளக்குறிச்சி_மாவட்டம் 27.09.2021