திருப்பூர்:ஏப்.30., தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் சூழலை கருத்தில் கொண்டு திருப்பூர் வடக்கு மாவட்டம் கூத்தம்பாளையம் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முழு கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி கிளை செயலாளர் சாதிக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மஜீத், அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் இப்ராஹிம்,ஷேக் அப்துல்லா, கிளை பொருளாளர் பைசூர் ரகுமான், துணைச் செயலாளர்கள் சேக் உசேன், பாண்டியன் நகர் கிளை செயலாளர் சம்சுதீன், உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முக கவசங்கள், வழங்கி கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருப்பூர்_வடக்கு_மாவட்டம் 30.04.2021
Month:
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்! தமிழக அரசு கவனமாக அணுக வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA அறிக்கை!
கொரோனா அபாயங்களை கட்டுப்படுத்த ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க வேண்டிய தேவையில் நாடு உள்ளதால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க இன்றைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு கால அனுபவத்தை பயன்படுத்தி, இரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை திட்டங்களை மத்திய மாநில-அரசுகள் செய்யாததே இந்த பேரழிவு ஏற்பட காரணமாகும் வெற்றுப் பேச்சுகளும், வீண் பெருமைகளும் மட்டுமே சாதனைகள் என கருதும் பிரதமர் மோடி அவர்களின் தூரநோக்கற்ற அணுகுமுறைகள் இன்று ஸ்டெர்லைட் போன்ற மக்கள் விரோத ஆலைகள் உயிர்பெற வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு 4 மாத கால அவகாசத்துடன், ஆக்சிஜனை மட்டுமே தயாரிப்பதற்கு, மின்இணைப்பு கொடுப்பதாக விளக்கம் அளித்தாலும், வேதாந்த நிறுவனம் தற்போது கொடுத்து இருக்கும் அறிக்கை சந்தேகங்களை உருவாக்குகிறது. அந்த ஆலையின் பேராபத்திற்கு எதிராக மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டக் களமும், அதற்கு 13 போராளிகள் செய்த உயிர்த் தியாகமும் தீயாய் சுடர்விட்டு எரிகின்றன. பாதிக்கப்பட்ட அம்மக்களின் கோபம் தணியவில்லை என்பதை புரிந்து, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இப்பிரச்சனையை தமிழக அரசு கையாள வேண்டும். அடுத்த ஆண்டும்
பாண்டிச்சேரி அப்துல் சமது உடல் நல்லடக்கத்தில் பங்கேற்ற மஜகவினர்.!
பாண்டிச்சேரி.ஏப்ரல்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் பாண்டிச்சேரி அப்துல் சமது அவர்கள் இன்று உயிரிழந்தார், அன்னாரின் உடல் நல்லடக்கம் நெல்லித்தோப்பு பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் இறுதி தொழுகை நடைபெற்று, உடல் அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இறுதி நிகழ்வில் மஜக மாநிலத் துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ரிஸ்வான், கடலூர் மன்சூர் உள்ளிட்ட மஜக-வினர் பங்கேற்றனர், மேலும் பாண்டிச்சேரி அப்துல் சமது அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #பாண்டிச்சேரி 24.04.2021
மஜக முன்னாள் மாநில துணைச்செயலாளர் புதுச்சேரி அப்துல்சமது மரணம்!பொதுச்செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA இரங்கல்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் பாண்டிச்சேரி அப்துல் சமது அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். கட்சி தொடங்கிய நாட்களில் தீவிரமாக செயல்பட்ட அவர், தனது சொந்த ஊரான கீழக்கரையிலும் கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டினார். பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்ட அவர் இன்று கொரோனா வால் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. மஜக ஒரு தீவிர ஊழியரை இழந்திருக்கிறது. இறைவன் அவரின் பிழைகளை மன்னித்து அவரது மறு உலக வாழ்வை சிறப்பிக்க பிரார்த்திக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 24.04.2021
கோவிசீல்டு தடுப்பூசி விலை அதிகரிப்பு… மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!
கொரணா தொற்றை தடுக்க புனேயில் உள்ள #சீரம் நிறுவனம் கண்டு பிடித்த #கோவிசீல்டு என்ற தடுப்பூசியின் விலை 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது இன்று கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசு மருத்துமனைகளில் இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி அது மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் விலை தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் கலந்துக்கொண்டே இம் முடிவை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத கண்டிக்கத்தக்க முடிவாகும். உலகத்தையே மிரட்டி வரும் இந்நோய் தொற்றால் அனைவரும் கவலையடைந்துள்ளனர்.நம் நாட்டில் இதன் இரண்டாம் அலையால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய, மாநில அரசுகள் நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் உள்ள விலையை விட இது குறைவு என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அந்த நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமும், தனிநபர் வருமானமும் வேறு. அதை ஏழைகளும், நடுத்தர மக்களும் நிரம்பி வாழும் நமது நாட்டு சூழலோடு ஒப்பிடக்கூடாது. இந்த விலையேற்றம் என்பது கார்ப்பரேட் தந்திரந்தோடு கொண்டு