பிப்.28, தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை முதலே நகரின் அனைத்து மஜக கொடிக்கம்பங்களில் கொடியேற்றபட்டன. தொடர்ந்து மரம் நடப்பட்டது. பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது. பிறகு வீரபாண்டியபட்டினத்தில் உள்ள கருணாலயா ஆதரவற்றோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அனைத்து நிகழ்வுகளிலும் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர்கள் முகம்மது நஜிப், ராசுக்குட்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது சபிர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாஹிப், காயல்பட்டினம் நகர செயலாளர் இப்னுமாஜா, நகர நிர்வாகிகள், மீரான், சிக்கந்தர் பாட்சா, அப்துர் ரஹ்மான், முஜிபுர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_தெற்கு_மாவட்டம்.
Month:
மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா! நெல்லையில் மஜக சார்பில் இரத்ததான முகாம்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA துவக்கி வைத்தார்!
நெல்லை பிப்.28 மனிதநேய ஜனநாயக கட்சி ஆறாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் வண்ணார பேட்டையில் உள்ள மஜக அலுவலகத்தில் வைத்து அன்னை வேளாங்கன்னி இரத்த வங்கியோடு இணைந்து இரத்ததான முகாம் மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இரத்ததான முகாமை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் துவக்கி வைத்து கடந்தகால சாதனைகளை விளக்கி மக்கள் மத்தியில் உரையாற்றினார். இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாய், அவர்கள் வாழ்துரை வழங்கினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜாஹிர் உசேன், நெல்லை மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, துணை செயலாளர்கள் இரா.முத்துக்குமார், காயல் A1மைதீன், செய்யதலி, அணி நிர்வாகிகள் மன்சூர்அலி, நெல்லை ஜாஹிர், ராபியா சேக், பத்தமடை கனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். தகவல் #மஜக_தகவல்தொழில்நுட்பஅணி #MJKITWING #நெல்லைமாவட்டம் 28-02-2021
லால்பேட்டையில் மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா..! சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்!!
பிப்.28, கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 6 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறுவர், சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. சிறுவர், சிறுமியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றனர். கட்சியின் துவக்க விழாவில் பேரணிகள், கொடியேற்றம் என நடந்து கொண்டிருக்கும் வேலையில் மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளை நடத்தியது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு பரிசுகளை மாவட்ட செயலாளர் OR. ஜாக்கிர் உசேன், மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், ரியாஸ், மாவட்ட வணிகர் அணி செயலாளரும், எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவருமான Amk முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மாணவர் இந்தியா முன்னாள் மாவட்ட செயலாளர் அஜ்ஹர் அலி, நகர நிர்வாகிகள் ஜாஹிர், நூர் உள்ளிட்டோர் வழங்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
பொதக்குடியில் மஜக 6ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி! கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட்டம்!!
பிப்.28, திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் மஜகவின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழா கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்கு கிளை செயலாளர் M.A.முனவர் ஹசன் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் P.M.A.சீனி ஜெஹபர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம் ஜம் சாகுல் ஹமீது, ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர் P.M.H.நத்தர் கனி முன்னிலை வகித்தனர். இதில் மேலபள்ளிவாசல் முத்தவல்லி A.M.லியாகத் அலி கொடியேற்றி வைத்தார். ஊர் உறவின் முறை ஜமாத் அறப்பணி சங்க தலைவர் மஹதும் மைதீன் பொதுமக்களுக்கு முதல் மரக்கன்றினை கொடுத்து விநியோகத்தைத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஜமாத்தார்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட திரளான மஜகவினர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #திருவாரூர்_மாவட்டம்.