உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது கொரோனா வைரஸ் நோய். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றன. மக்கள் ஓரிடத்தில் குழுமக் கூடாது என்பதால், சிறு குறு தொழில்கள் உட்பட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. கூலித் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், சிறு கடை வணிகர்கள், வாடகை கார் ஒட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோர் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதை உணர்ந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும், நிதி உதவிகளையும் மக்களுக்கு அறிவித்துள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்குவதுடன், ஒரு ரேஷன் அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாகவும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இது எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையில், இதனை ஒழிக்க பொதுமக்களின் பேராதரவு அவசியமாகும். அப்படியெனில், வருவாய் இழப்பை சந்திக்கும் மக்களின் இன்னல்களை போக்குவது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும். இவ்விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேயஜனநாயககட்சி, 23.03.2020
Month:
சட்டசபையை ஒத்திவையுங்கள் தமிழகஅரசுக்கு மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA வேண்டுகோள்.!
கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகமே ஆடிப் போயிருக்கிறது. நமது நாட்டில் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து முடக்கப்பட்டு, மாநில எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன. அரசு எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பாராபட்சமின்றி ஏற்று, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுக்க முன் எச்சரிக்கையாக, 77 மாவட்டங்களை கண்டறிந்து, அங்கு எல்லைகளை மூடி, ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய தமிழக மாவட்டங்களும் வருகிறது. இந்திலையில் தமிழக சட்டமன்றம் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என்பது நியாயமற்றதாகும். குளிரூட்டப்பட்ட அறையில் கூடக் கூடாது, ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வேண்டும், தேவையற்ற பயணங்கள் மற்றும் குழு சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டல்களை வழங்கி விட்டு, அது நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பொருந்தாது என்பது எந்த வகையில் நியாயம்? இதனால் பல MLA-க்கள் கவலையடைந்துள்ளனர். அவர்கள் இத்தருணத்தில் தொகுதியில் இருந்து அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டிய கடமையும் உண்டு. எனவே அசாதாரண சூழலை கவனத்தில் கொண்டு, அனைவரின் நலனையும் எண்ணிப்
மஜக தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக வீடு வீடாக சென்றுகொரோனாவிழிப்புணர்வு_பரப்புரை..!
சென்னை.மார்ச்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும் பல பள்ளிவாசல்களிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பிரச்சாரத்தில் மாவட்டச் செயலாளர் அப்துல் கையூம் தலைமையில் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் ஈடுபட்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்சென்னைகிழக்குமாவட்டம் 20-03-2020
சலவை தொழிலாளர்களுக்கு உள்இடஓதுக்கீடு வேண்டும்.! பிளாஸ்டிக்கழிவுகளிலிருந்து சாலைபோடவேண்டும்! சட்டப்பேரவையில்முதமிமுன்அன்சாரி
மார்ச் 21 அன்று சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.. சலவை தொழில் செய்யும் வண்ணார் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பிரித்து தனி உள் ஒதுக்கீடு வழங்கி அது குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று பேசினார். இதை அறிந்து, அவருக்கு நன்றி சொன்ன, வண்ணார் சமூக மக்களிடம் இதற்காக தானும், தனியரசும் முன் முயற்சி செய்வதாகவும் கூறினார். தனியரசு அவர்கள் இக்கோரிக்கையை அவரிடம் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. அது போல் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து சாலைகள் அமைப்பது குறித்து தமிழக அரசு யோசிக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் அந்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் சபையில் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் பயனுள்ள வகையில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்
கள்ளர் சீர்த்திருத்தப் பள்ளிகளை சீரமைக்க வேண்டும்! சட்டப்பேரவையில் முதமிமுன் அன்சாரி MLA கோரிக்கை ஏற்பு.!
மார்ச் 21 அன்று, பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசினார். கள்ளர் சீர்த்திருத்த பள்ளிகளை தமிழக அரசு மேம்படுத்தி அதன் உள் கட்டமைப்புகளை சீர்படுத்தி, போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார். அவரது கோரிக்கையை ஏற்கும் வகையில், அமைச்சர் வளர்மதி அவர்கள் கீழ்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு மேஜை, இருக்கைகள் வாங்க 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும், பள்ளிகளில் சாய்தள வசதி ஏற்படுத்த 2 கோடியே 40 லட்சத்து 79 ஆயிரம் வழங்கப்படும், 25 விடுதிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட 3 கோடி ஒதுக்கப்படும், கணினிகள் வாங்க 96 லட்சத்து 41 ஆயிரம் வழங்கப்படும், 6-ஆம் வகுப்பில் ஆங்கில வகுப்புகள் தொடங்க 1 கோடியே 50 லட்சம் வழங்கப்படும் என 5 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். இதற்காக அரசுக்கும், அமைச்சருக்கும் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார். இக்கோரிக்கையை பேரவையில் எழுப்பியதற்காக, அவரை அமைச்சர் செல்லூர்.ராஜ், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA., மற்றும் பல MLA-க்களும் பாராட்டு தெரிவித்தனர். இது அம்மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை