சென்னை.ஜனவரி.31.., மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் பல வடிவங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை மண்ணடியில் உள்ள இளையான்குடி வட்டார முஸ்லிம் ஜமாத் சார்பாக இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசல் முன்பாக கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோசங்கள் ஏதும் போடாமல் 15 நிமிடம் மட்டும் அமைதி வழி போராட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் "இன்றைய தினம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்பு சட்டத்திற்கு எதிராக புதிய வடிவிலான ஒரு போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இப்போராட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும் முன்னெடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடிந்தவுடன் 15 நிமிடம் மட்டும் அமைதியாக கோரிக்கை பதாகைகளை ஏந்தி நின்று விட்டு பின்னர் கலைந்து செல்ல வேண்டும். இதன் மூலம் போராட்ட உணர்வை மழுங்க விடாமல் செய்யலாம்" என்று கோரிக்கை வைத்தார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 31-01-2020
Month:
கருப்புசட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி…! எஸ்எஸ்ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!
சென்னை.ஜனவரி.30.., அனைத்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அறிவிக்கப்பட்ட மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது பல லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்த இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் இளையான்குடி வட்டார முஸ்லிம் ஜமாத் தலைவர் நசீர் கான், இமாம் முஹம்மது மைதீன் உலவி மற்றும் ஈத்கா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹூஸைன் காஸிமி ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஊர்வலமாக அணிவகுத்து சென்று சென்னை பிராட்வேயில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். மக்களை மத நீதியாக பிரிக்காதே, CAA கருப்பு சட்டத்தை திரும்பப் பெறு, NRC, NPR கணக்கெடுப்பு நடத்தாதே உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மஜக பொருளாளருடன் மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், பொறியாளர் சைஃபுல்லா, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஹாஜி, பொருளாளர் குப்பை சீனி, துணைச் செயலாளர்கள் அஸ்கர் அலி, முஹம்மது அலி, மற்றும் துறைமுகம் சிக்கந்தர், அம்ஜத், 56-வது வார்டுச் செயலாளர்
950 கிமீ நீளத்திற்கு அணிவகுத்த தமிழர்கள்! கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பொங்கியெழுந்த தமிழகம்!
ஜனவரி.30, காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 அன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் திருவெற்றியூர் தொடங்கி கன்னியாக்குமரி வரை 950 கி.மீ நீளத்திற்கு மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. CAA,NRC,NPR ஆகிய குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அணிதிரள்வோம் என அறிவிக்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி உட்பட பல கட்சிகளும், இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றன. சென்னையில் அண்ணா மேம்பாலம் முதல் சைதாப்பேட்டை வரை மஜக தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., இயக்குனர் கௌதமன், இயக்குனர் புகழேந்தி, மஜக துணை பொதுச் செயலாளர் தைமியா உட்பட பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் அணிவகுத்தனர். குடும்பம், குடும்பமாக மக்கள் குழந்தைகளுடன் அணிவகுக்க மனிதசங்கிலி மனித சுவராக மாறியது. சென்னை புதுக்கல்லூரி, லயோலா, நந்தனம், பிரசிடென்சி கல்லூரி மாணவர்களும், SIET, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளும் ஆவேசமாக முழக்கமிட்டு அணிவகுத்தனர். "எங்கள் மரபணுவை சுமக்கும் இஸ்லாமிய உறவுகளை இழக்க அனுமதிக்க மாட்டோம் " என இயக்குனர் கௌதமன் முழங்கினார். " காந்தியடிகளை கொன்ற கோட்சே கும்பலை விரட்டியடிப்போம்" என இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் முழங்கினார். போராட்ட களம் எழுச்சியாக தொடங்கியது. 4:30 மணிக்கு
இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் எஸ்எஸ்ஹாரூன்ரசீது கண்டன உரை
தஞ்சாவூர்., ஜன. 29 குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி பாபநாசம் வட்டார அனைத்து இஸ்லாமிய மஹல்லா ஜமாஅத் & இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புகள் சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், மேலவீதி, அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 27.01.2020 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மஜக மாநில வர்த்தக அணிச் செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் ஏ.காதர்பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் அ.முஹம்மது மஃரூப், தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் எல்.முஹம்மது இப்ராஹிம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் அ.அஷ்ரப் அலி மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சாவூர்வடக்குமாவட்டம் 27-01-2020
மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக ஆவடியில் மாபெரும் பொதுக்கூட்டம்..! எஸ்எஸ்ஹாரூன் ரசீது கண்டன உரை..!!
சென்னை.,ஜன.29 மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஆவடி நகரம் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஆவடியில் 28.01.2020 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பேசுகையில்... தற்போது நடைபெறும் போராட்டங்களை உலமாக்கள் முன்னெடுத்து வருகிறார்கள். முதலாம் சுதந்திர போராட்டத்தில் உலமாக்களின் பங்களிப்பால் எப்படி போராட்டம் வீரியம் அடைந்ததோ, அதேபோல் தற்போது இரண்டாம் சுதந்திர போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். இன்று மக்கள் விரோத மத்திய அரசு இது போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெறும் வரை எங்களின் போராட்டம் ஓயாது என்று சூளுரைத்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அக்பர் உசேன், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் சாகுல் ஹமீது, திருவள்ளூர் மேற்கு மாவட்டப்பொருளாளர் பக்ரூதீன், மாவட்ட துணைச் செயலாளர் பஷீர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் இலியாஸ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கலிமுல்லா ஆவடி நகரச் செயலாளர்