வேதை.செப்.09., தோப்புத்துறையில் தொழில் அதிபர் சுல்தான் ஆரிப் அவர்களின் ஒத்துழைப்போடு ,துபை சங்கம் சர்பில் புதிய நூலகம் ஒன்று திறக்கப்பட்டது. அதில் பேசிய சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் , முஸ்லிம் சமூகம் வழங்கிய அறிவு கொடைகளை வரலாற்று ரீதியாக எடுத்து வைத்து உரையாற்றினார். தமிமுன் அன்சாரி MLA அவர்களை இளம் தலைவர் என்றும், அறிவாளி என்றும் பாராட்டியவர் அவருக்கும், தனக்கும் 20 ஆண்டு கால நட்பு இருப்பதை சுட்டிக்காட்டி, தோப்புத்துறையின் வரலாற்று சிறப்புகளையும் பட்டியலிட்டார். அடுத்துப் பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு... நூல்கள் அறிவை விசாலமாக்குகின்றன. ஒரு நாட்டில் புரட்சியை உருவாக்க வேண்டுமானால் அங்கு முதலில் ஆயுதங்களை அல்ல, புத்தகங்களையே இறக்குமதி செய்ய வேண்டும். துப்பாக்கியை விட வலிமையானவை நூல்கள். நான் இதுவரை படிக்காத ஒரு நூலை எனக்கு தருபவர் தான் , எனது விருப்பத்திற்கு உரியவர் என்றார் அபிரகாம் லிங்கன். நூலகங்கள் இல்லாத ஊர்கள் ஊரே அல்ல என்றார் லெனின். பேரறிஞர் அண்ணா அவர்கள், தனக்கு அறுவை கிசிச்சை செய்யப்படுவதற்கு முன்பாக ,ஒரு நாள் அதை தள்ளிப் போட முடியுமா?
Month:
நாகை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,வதிஸ்ட்டாச்சேரியில் புதிய கிளை உதயம்.
நாகை.செப்.10., நாகை வடக்கு மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம், வதிஸ்ட்டாச்சேரியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை துவங்க கூட்டம் 09.09.2018 ஞாயிறு அன்று இரவு 8 மணியளவில் நடைப்பெற்றது.இதற்கு நாகை வடக்கு மாவட்ட அமைப்புகுழு தலைவர் சங்கை தாஜ்தீன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கிளை செயலாளராக M.யாசர் அரபாத்,கிளை பொருளாளராக S.அக்பர் அலி, துணை செயலாளராக சுபைது,மாணவர் இந்தியா செயலாளராக S.ஹாஜா ஆகியோர்கள் தேர்வு ஒரு மனதாக செய்யப்பட்டனர். செப்டம்பர்-15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 14 ஆண்டுகளுக்கு நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் சாதி,மத,அரசியல் பேதமின்றி பொது மன்னிப்பு கீழ் விடுதலை செய்ய வேண்டுமென ஆட்சியர்களிடம் வலியுறுத்துவது. மக்களை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத பெட்ரோல்,டீசல்,கேஸ் விலையை உயர்த்தி கொண்டுபோகும் மத்திய அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் கிளை செயலாளர் M.யாசர் அரபாத் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #MJK_IT_WING. #நாகை_வடக்கு_மாவட்டம்.
வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம்..! மஜக பங்கேற்பு..!
கோவை.செப்.10., வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய பாசிச பாஜக அரசை கண்டித்தும் #காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.இதில் கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக பங்கேற்பதற்காக 30க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மஜகவினர் பேரணியாக சென்றனர்.இதில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில தொழிற்சங்க செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், PM.முகம்மதுரபீக், ABT.பாருக், சிங்கை சுலைமான்.தொழிற் சங்க மாவட்ட தலைவர் அக்கீம், மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அபு, இளைஞரணி மாவட்ட செயலாளர் PMA.பைசல், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல்அமீன், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், மற்றும் மாவட்ட, பகுதி, கிளை, நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தகவல்#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#கோவை_மாநகர்_மாவட்டம்10.09.18
வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு..! கோட்டைப்பட்டினத்தில் மஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…!!
அறந்தாங்கி.செப்.09., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன் (செல்லஅத்தா) தலைமையில் பெட்ரோலை பாடையேற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாவட்ட செயலாளர் சாஜீதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக கோட்டைப்பட்டிணம் ஆட்டோஸ்ட்டான்ட் முதல் செக்போஸ்ட் வரை பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து அதற்கு #பாடை_கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர், தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பபினார்கள். இதில் மாவட்ட துணை செயலாளர் அரசை அபுதாகிர், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கோட்டை முஜிபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோட்டை அஜ்மீர், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் அப்துல் கனி, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ரியாஸ் அஹமது, ஒன்றிய பொருளாளர் நாகூர் கனி. ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் செய்யதுஅபுதாகிர், பொருளாளர் முகம்மது குஞ்சாலி, கோட்டைப்பட்டினம் MJTS நகர செயலாளர் அனீஸ், மாணவர் இந்தியா நகர செயலாளர் உமர் ஹத்தாப், நகர மஜக பொருளாளர் முகம்மது ராசிக் மற்றும் அம்மாப்பட்டினம்
நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அனுப்பிய வெள்ள நிவாரண பொருட்கள்..! கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் வழங்கப்பட்டது…!!
நாகை.செப்.08., நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்களால் திரட்டப்பட்ட ரூபாய் 2,50,000 மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள், கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா தாலுக்கா, கடங்கலூர் ஊராட்சி, முப்பத்தடம் கிராமத்திற்குட்பட்ட 250 குடும்பங்களுக்கு முன்னாள் அமைச்சரும், களமச்சேரி தொகுதி MLA V.K. இப்ராஹீம் குஞ்சு, முப்பத் தடம் கிராம முஸ்லிம் ஜமாத் செயலாளர் சாஜஹான், பிரைமரி முஸ்லிம் லீக் செயலாளர் இஸ்மாயில், பிரைமரி முஸ்லிம் லீக் துணை செயலாளர் அஷ்ரப், கடங்கலூர் ஆண்டனி மாஸ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் M. பரகத் அலி, மா.து. செயலாளர் ஜாஹீர் உசைன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜலாலுதீன், மு.மா.து.செயலாளர் ஹமீது ஜெகபர், மஞ்சகொல்லை கிளை செயலாளர் சேக் அலி, வவ்வாலடி கிளை செயலாளர் சாகுல் ஹமீது, மஞ்சகொல்லை கிளையை சேர்ந்த 3 சகோதரர்கள் , பொரவாச்சேரி கிளையை சேர்ந்த 5 சகோதரர்கள் , மருங்கூர் பிரவின் குமார் ஆகியோர் கேரளா சென்று பொருட்களை நேரில் வழங்கியது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 08.09.2018