(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை..) ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தொடர் போராட்டத்தின் நூறாவது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப் பேரணி சென்ற தூத்துக்குடியிலுள்ள 18 கிராம மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உரிமைக்காக போராடிய பொதுமக்கள் மீது , துப்பாக்கி சூடு நடத்தியது நம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என்கிற அச்சத்தை எழுப்புகின்றது. இக்கொடுஞ் செயலை மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சுற்றுச்சூழலுக்காகவும், மண்ணுரிமைக்காகவும் உணர்வுப்பூர்வமாக போராடிய அம்மக்களின் நியாயத்தை உணரத்தவறியது அரசு இயந்திரங்களின் குற்றமாகும். நம்பிக்கை இழந்த மக்கள் வீதிகளில் அணிதிரள்வது என்பது ஜனநாயத்தின் ஒரு அம்சமாகும் . அதில் சிலர் வரம்புமீறல்களில் ஈடுபடும்போது, அதை இலகுவாக கையாண்டிருந்திருக்க வேண்டும் . அதற்கான வழிமுறைகளும் இருக்கின்றன. ஆனால் காக்கை, குருவிகளை சுடுவதுபோல ஈவு இரக்கமற்ற முறையில் போராட்டகாரர்களை சுட்டுக்கொன்றிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி அங்கு நிகழாமல் இருக்க , தமிழக அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக
Month:
இளைஞர்கள் மாணவர்களை வெகுவாக ஈர்த்த மஜக..!
திருப்பூர். மே.20., திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.கே.ஆர் காலணி புஸ்பா நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் தங்களை சேவை அரசியலில் ஈடுபட , மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் #இ_ஹைதர்_அலி அவர்கள் முன்னிலையில் தங்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யில் இணைத்துக்கொண்டனர். கல்லூரி மாணவர்கள் அனைவரும் மஜகவின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா அமைப்பில் இணைந்து செயலாற்ற உறுதி பூண்டனர். இந்த நிகழ்வின் போது மஜக மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹ்மது, மாணவர் இந்தியா மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், ஆசீக், பெரியதோட்டம் அபு, ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருப்பூர்_மாவட்டம் 20-05-2018
இளைஞர்களை ஈர்த்த மஜகவின் களப்பணிகள்..! ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!!
ஈரோடு.மே.20., இன்று ஈரோடு கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி இளைஞரணியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல் கட்டமாக, 6-வது மற்றும் 7-வது வார்டுகளில் #மஜக முன்னெடுக்கும் களப்பணி பற்றிய குழு பிரச்சாரம் நடைபெற்றது., இரண்டாவது கட்டமாக, உறுப்பினர்கள் சேர்க்கை, முன்றாவது கட்டமாக, 7- வது வார்டில் கொடியேற்று விழா நடைபெற்றது., இந்நிகழ்ச்சியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சட்டமன்ற பணிகள், மாநில பொருளாளர் மற்றும் ஈரோடு மாவட்ட மஜகவினர் ஆகியோரின் மக்களுக்கான களப்பணிகளின் ஈடுபாடுகள் தங்களுக்கு மிகவும் பிடித்தாகவும், குறிப்பாக காவிரி நீர் விவகாரத்தில் #மஜக-வினரின் தொடர் போரட்டங்கள் மற்றும் மக்களுக்கான சேவை அரசியலில் தங்களுக்கும் அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதால், தாங்கள் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தோம் என்று மிகவும் நெகிழ்வுடன் கூறினார். இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி செயலாளர் R. #திலிப் குமார் முன்னிலையில் வகித்தார், பகுதி இளைஞரணி செயலாளர் #தினகரன் கொடியேற்றினார் . இதில், 6 வது வார்டு இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்னன் மற்றும் பரத், ஜெரோம் , மாத்யூ. ஸ்டீபன், ரமேஷ், குனா, சந்தோஷ், அன்பு செல்வன், ஆகியோர் கலந்து கொன்டனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING. #ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 20.05.2018
சிங்கப்பூர் ‘UIMA’ இஃப்தார் நிகழ்வில் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..!
சிங்கப்பூர்.மே.20., சிங்கப்பூரில் மூத்த அமைப்பான 'ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம்' சார்பில் இன்று இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது...! இயற்கை சூழ , மிகப் பழைமையான பள்ளிவாசலான 'உமர் சல்மா' மஸ்ஜிதை தேர்வு செய்து அங்கே நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்வில், சிங்கப்பூரின் கல்வி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜனாப் முகம்மது பைசல் இப்ராஹிம் அவர்களும், 8 நாடுகளை சேர்ந்த தூதர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுடன் 'UIMA' அமைப்பின் அழைப்பை ஏற்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களும் பங்கேற்றார். இந்த அமைப்பு, முன்னாள் சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும், சிங்கையின் தந்தையான லீ-குவான்-யூ அவர்களின் நண்பருமான, நாகூர் வம்சாவளியை சேர்ந்த, காலம் சென்ற #ஜனாப்_அப்துல்_ஜப்பார் அவர்கள் முன்னின்று உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசும் இனிய திறந்தவெளி சூழலில் நடைப்பெற்ற இஃப்தார் நிகழ்வில், வசதி குறைந்தவர்களுக்கு ரமலான் அன்பளிப்பு பைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சங்கத்தலைவர் பரியுல்லாஹ், சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான சமூக ஆர்வலர் ஜஹாங்கீர், #UIMA அமைப்பின் CEO ஹாஜா மெய்தீன், பிரபல தொழில் அதிபர் அகமது புஹாரி (BSA அவர்களின் மகன்), சிங்கப்பூர்-இந்திய வர்த்தக சங்க தலைவர் சந்துரு,
மிகச்சிறந்த ஆளுமை BSA! சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சிங்கப்பூர்.மே.19., இன்று சிங்கப்பூரில் #B_S_அப்துல்_ரஹ்மான் பல்கலைக்கழக (#கிரஸண்ட்) முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய #இஃப்தார் நிகழ்வில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA பங்கேற்றார். பிரபல சமூகசேவை நிறுவனமான ஜாமியாவின் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் , அவரை சங்கத்தின் தலைவர் #இப்ராகிம் ,மற்றும் நிர்வாகிகளான #யூசுப், #ராஜகணேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். #மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதில் பேசியதாவது , பல இன மக்களும் இணைந்தும், கலந்தும் வாழும் சிங்கப்பூரில் B.S.அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும் இந்நிகழ்வில், B.S.அப்துல் ரஹ்மானை நினைவு கூறுவது அவசியம் என கருதுகிறேன் . அவர் கடும் உழைப்பால் உயர்ந்தவர். #MGR-க்கும், #கலைஞருக்கும் இடையில் ஒரே நேரத்தில் நண்பராக திகழ்ந்தார் . அதனால் தான் இருவரின் ஆட்சியிலும் அவர் பல திட்டங்களை ஒப்பந்தங்கள் மூலம் செயல்படுத்தினார். அண்ணா மேம்பாலம், மெரீனா லைட் ஹவுஸ், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூலகம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, புதிய சட்டமன்றம் என பல கட்டிடங்களை இவரது நிறுவனம் தான் கட்டியது. நவீன சென்னையின்