வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்று வேலூர் கிழக்கு மாவட்டம் வருகை புரிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள் . #நிகழ்வு_1 மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி சார்பாக 31வது மேற்கு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவ் வழியாக சென்ற பொது மக்களில் ஒருவரான சகோதரர் தன்னிச்சையாக வருகை தந்து வேலூர் மாவட்டத்தில் மஜக-வினரின் களப்பணியை வெகுவாக பாரட்டியதுடன் இவர்களின் களப்பணியை கண்டவுடன் எனக்கும் உங்கள் கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை வருகிறது என்றார். #நிகழ்வு_2 கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாநகர பழைய மீன் மார்கெட் அருகில் நீர் மோர் பந்தல் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள்
Month:
மஜக மாநில பொருளாளர் குடியாத்தம் வருகை..! பிரமாண்டமாய் நடைபெற்ற மஜகவின் கொடியேற்றம் நிகழ்ச்சி..!!
வேலூர்.மே.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.Com., அவர்கள் நேற்றுவேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரத்திற்கு வருகை புரிந்தார்கள். இவரின் வருகையையொட்டி குடியாத்தம் நகர மஜக-வினர் 100க்கும் மேற்ப்பட்டோர் வாகன பேரணியாக குடியாத்தம் வளைவிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை நகர செயலாளர் எஸ்.அனீஸ் தலைமையில் வருகை புரிந்தனர். இந்த வாகன பேரணியாக சென்ற பொழுது அந்த சாலை முழுவதும் வாகனங்களில் மஜகவின் கருஞ்சிவப்பு கொடிகள் மிகப் பிரமாண்டமாய் காணப்பட்டன, மஜகவினர் பேரணியாக சென்றதை பொது மக்களுக்கும், சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் எவ்வித இடையுறு இல்லாமல் மிகவும் கட்டுக் கோப்புடனும் காவல் துறை அதிகாரிகளின் பாதுகாப்போடும் மஜக-வின் இளைஞர் பட்டாளம் தங்கள் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கவிருப்பதை மிகுந்த உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர். முதல்கட்டமாக குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி அலுவலகம் எதிரில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்த கட்டமாக, சித்தூர் கேட் பகுதியிலும்., மூன்றாம் கட்டமாக, 8 வது வார்டு, அசேன் தெருவிலும், மிக பிரமாண்டமாக, பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மஜக-வினரின் பலத்த கோஷங்களுடன் மாநில
நாகூரில் மார்க் துறைமுகத்திற்கு எதிராக போராடிய 64பேர் ஜாமீனில் விடுதலை..! AS.அலாவுதீன் உள்ளிட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலை சென்று வரவேற்பு..!
திருச்சி.மே.11., கடந்த மே.04 ம் தேதி காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதிக்கு எதிராக நாகூரில் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய 64பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்களுக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. நேற்று மாலையில் இருந்து அவர்களை சிறையிலிருந்து வெளிக்கொண்டு வரும் பணியில் நாகூரைச் சேர்ந்த சாஹா மாலிம் உமர், சாகுல், ஹபீப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவினருடன் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையிலான ஒரு குழுவும் ஈடுபட்டனர். மஜக பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உமர் பாரூக், சாகுல்,ஹபீப் ஆகியோருடன் அலைபேசி வாயிலாக தொடர்ந்து பேசிவந்தார்கள். இன்று காலை மஜக மாநில நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, மாவட்ட துணை செயலாளர் SM. ரபீக், இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் ஏர்போர்ட் சதாம் மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் நாகூர் மக்களுடன் திருச்சி மத்திய சிறைக்குச் சென்று, விடுதலை ஆகி வெளியில் வந்த எம்.ஜி.கே. நிஜாமுதீன் உள்ளிட்ட 64 பேரையும் சிறைவாசலில்
மஹாதீருக்கு வாழ்த்துக்கள்..! மலேசியாவை காப்போம் என சூளுரைத்தார்! வெற்றிக் கண்டார்!
(மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியீடும் வாழ்த்துச் செய்தி..!) ஆசியாவின் தொட்டிலாக கொண்டாடப்படும் நாடு மலேசியா. நேற்று அங்கே நடைப்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியீடப்பட்டிருக்கிறது. கடந்த 60 ஆண்டு காலமாக அந்த நாட்டை தேசிய முன்னணி என்ற மூன்று இனங்களை பிரதிபலிக்கும் 'பாரிசான் நேஷ்னல்' ஆண்டு வந்தது .அதில் அவர் 70 சதவீத மக்கள் தொகையை கொண்ட பூர்வீக இனமான மலாய் மக்களை கொண்ட அம்னோ கட்சி பிரதானமாக இருந்தது. 60 ஆண்டு கால தொடர் ஆட்சியில் நஜீப் துன் ரசாக் ஆண்ட போது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தது, அவரது மனைவி ரோஸ்மா மன்சூர் பிலிப்பைன்ஸ் 'இமல்டா' வுடன் ஒப்பிடப்பட்டார். மனைவியின் ஊழலால் அவர் பெயர் கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வெளிநாடு ஒன்றில் இருந்து அவர் பெற்றதாக கூறப்படும் நன்கொடை பெரும் ஊழலாக விவாதிக்கப் பட்டது. இந்நிலையில் தான் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை அப்துல்லா படாவி கையில் ஒப்படைத்த மஹாதீர், மீண்டும் தனது 92 வயதில் களத்துக்கு வந்தார். கடும் விமர்சனங்களை அரசுக்கு எதிராக கூறினார். இதனால் அம்னோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவர் புதிய கட்சியை
தேனி மாவட்டம் பி.துலுக்கப்பட்டியில் சுமூக சூழலை காவல்துறை ஏற்படுத்த வேண்டும்..! பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த மஜக துணைப் பொதுச்செயலாளர்..!
தேனி.மே.10., தேனி மாவட்டம் பி.துலுக்கப்பட்டியில் கடந்த சில தினங்கள் முன்பு இருதரப்புக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாக அங்கு பெரும் வன்முறை கலவரம் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சந்தித்த #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்கள், மஜக தேனி மாவட்ட செயலாளர் ரியாஸ், தேனி மாவட்ட துணைசெயலாளர் கம்பம் கலில், பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரஹ்மான், கம்பம் நகர நிர்வாகி அரபாத், மற்றும் மஜக பெரியகுளம் நிர்வாகிகள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். . பி.துலுக்கப்பட்டி கிராமத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், அங்கு நிலவும் நல்லிணக்கத்தை விரும்பாத சிலர் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம்களிடையே கோபத்தை ஏற்படுத்தும் வகையிலான வாசகம் கொண்ட பேனரை சிலர் கட்டியுள்ளனர். அந்த குறிப்பிட்ட சம்பவத்தால் இரு சமூகத்திற்கிடையே பிரச்சினை எழும் என்று காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை மெத்தனமாக இருந்துள்ளது. தொடர்ந்து அங்கு இது தொடர்பாக அவ்வப்போது வாய்த்தகராறு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகி வந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்