மதுரை.மே.31. மதுரை வடக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நோன்பு துறப்பு எனும் #இஃப்தார்_நிகழ்ச்சி ஒத்தக்கடையில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சசிக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். ஒத்தக்கடை ஜமாத்தார்களும் நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த #மஜக மாநில #துணைப்பொது_செயலாளர்கள் மண்டலம் ஜெய்னுலாப்தீன் மற்றும் மன்னை.செல்லச்சாமி ஆகியோர் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துரை வழங்கினார்., மாநில துணைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் சுலைமான் நன்றியுரையாற்றினார். மதுரையில் மக்கள் பணியாற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக சமுதாய அமைப்புகள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து நல்லிணக்க திருவிழாவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இதில் மாவட்ட மருத்துவ அணிச்செயலாளர் பிரித்திவி ராஜ், ராஜேஸ் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் உலமா பெருமக்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் என பெரும்திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம். 30.05.2018
Month:
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA மதுரை வருகை..!
மதுரை.மே.30., மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் கமால் அவர்கள் கடந்த வாரம் மரணமடைந்ததையொட்டி அவரது இல்லத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக இன்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அம்சரி MLA அவர்கள் வருகை தந்தார்கள். அவரது இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி, தங்கள் குடும்பத்திற்கு மஜக எப்போதும் அரணாக இருக்குமென்று நம்பிக்கையூட்டினார். மகபூப்பாலையத்திற்கு வருகை தந்ததையொட்டி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், இளைஞர்களும் பொதுச்செயலாளரை சந்தித்து அலவளவினர். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மெய்தீன், வடக்கு மாவட்ட செயலாளர் ஒத்தக்கடை பாரூக், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா மற்றும் இரண்டு மாவட்ட நிர்வாகிகள், மனிதநேய சொந்தங்கள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_தெற்கு_மாவட்டம். 30.05.2018
சனாயா மண்டலத்தில் சாரை சாரையாக இளைஞர்கள் மஜகவை நோக்கி…!
கத்தார்.மே. 30., இன்று மாலை கத்தார் சனையா மண்டலத்திற்கு உட்பட்ட #கிராண்ட்_மால் பகுதியில் மண்டல செயலாளர் சகோதரர் நூர் முஹம்மத் தலைமையில் புதிதாக பல இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வின் போது, அனைவருக்கும் எதிர்வரும் ஜூன்-01 வெள்ளி மாலை நடைபெறவுள்ள #சமூக_நல்லிணக்க_இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. தகவல்: #MKP_IT_WING #MKP_சனையா_மண்டலம் #மனிதநேய_கலாச்சார_பேரவை_கத்தார்.
ரஜினிகாந்த் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும்! தூத்துக்குடியில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!
தூத்துக்குடி.மே.30., இன்று #தூத்துக்குடியில் போலிஸ் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சைப் பெறும் பொதுமக்களை, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 1/2 மணி நேரத்திற்கு முன்பு, #ரஜினிகாந்த் வந்து சென்றார். அப்போது அவர்களை பார்த்தப் பிறகு, போராட்டக்காரர்களை #சமூக_விரோதிகள் என கொச்சைப்படுத்தியது TV களில் பரப்பரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. இதனால் மருத்துவமனையே கொந்தளிப்பாக இருந்தது. அப்போது #மஜக வினருடன், தமிமுன் அன்சாரி MLA மருத்துவமனைக்கு வந்ததும், அவர்கள் மிகுந்த அன்போடும், நம்பிக்கையோடும் வரவேற்றனர். பலரும் தலைக்காயத்திற்கு ஆளானதை பார்க்க முடிந்தது. #துப்பாக்கி குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொஞ்சம் உடல்நிலை தேறி வருவதையும் பார்க்க முடிந்தது. எல்லோரும் கண்ணீர் மல்க போலீஸாரின் அராஜகத்தை சுட்டிக் காட்டினர். 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி அங்கு பெரிய கட்டோடு உட்கார்ந்திருந்தார். அவரை விசாரித்தப்போது, போலீஸார் அவரது கையைப் பிடித்து முறுக்கி உடைத்ததாக கூறி தழுதழுத்தார். இப்படி ஒவ்வொருவரின் கண்ணீரும், துயரமும் அனைவரையும் உருக்கியது. நேற்று பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்றத்தில் தூத்துக்குடி மக்களுக்காக பேசியதை தொலைக்காட்சிகளில் பார்த்ததாகவும், எங்களுக்கு குறல் கொடுத்ததற்காக நன்றி என்றும், உங்களை போன்ற தலைவர்களை நம்புகிறோம் என்றும்
இதயங்களால் ஒன்றினைவோம்..! திருப்பூரில் மஜக சார்பில் இப்தார் நிகழ்ச்சி..!!
திருப்பூர்.மே.29., இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பில் நோன்பு துறப்பு எனும் இஃப்தார் நிகழ்ச்சி HMS திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்புவாய்ந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது வரவேற்புரை நிகழ்த்தினார், மாவட்ட துணைச்செயலாளர்கள், மீரான், லியாகத் அலி, ரஹ்மான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், அவர்கள் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துரை வழங்கினார். மாநில துணைச்செயலாளர் டி.கே.பஷீர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் அக்பர் அலி நன்றியுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் வானவில் காதர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளபில் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசீக், லியாகத் அலி, மாவட்ட இளைஞர் அணிச்செயலாளர் அஸ்கர். மாவட்ட வர்த்தகர் அணிச்செயலாளர். ஷேக் பரித், தொழிற்சங்க அணி மாவட்ட செயலாளர் சாகுல், மாவட்ட தொழிற்சங்க இணைச்செயலாளர்கள் அப்துல் வகாப், கபீர், தாராபுரம், அவினாசி நிர்வாகிகள் , பெரிய தோட்டம் அபு, செரங்காடு அப்பாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் உலமாபெருமக்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் என