மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முதலமைச்சரிடம் கோரிக்கை .! சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி . கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்தார் . அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் . இக்கோரிக்கையை ஏற்றுகொண்ட முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார் . தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. தலைமை செயலகம் சென்னை. #MJK_IT_WING 22.06.2017
Month:
ஜனாதிபதி தேர்தலில் நாட்டு நலனை காக்கும் வகையில் செயல்படுவோம்.
(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிடும் அறிக்கை) முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள், இஃப்தார் நிகழ்ச்சி நடத்திய இரண்டு மணி நேரத்திற்குள் 'ஜனாதிபதி தேர்தலில் BJP வேட்பாளருக்கு ஆதரவு' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதில் பேசிய முதல்வர் எடப்பாடியார் மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதிக்காக பயணிப்போம் என்றும் பேசினார். இப்படி பேசிய இரண்டு மணிநேரத்திற்குள் அவர் எடுத்திருக்கும் முடிவு அரசியல் அரங்கில் ஆழமான விவாதங்களையும், விமர்சனங்களையும் உருவாக்கி இருக்கிறது. இது மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிரானது என்பதில் ஐயமில்லை, இது அதிமுக தொண்டர்களின் மனநிலைக்கும் எதிரானது என்பது தான் உண்மை. இது அதிமுகவின் முடிவா ? எடப்பாடியாரின் முடிவா என்பதை எதிர்காலம் விளக்கும். இவ்விஷயத்தில் ஏற்கனவே அறிவித்த முடிவில் மஜக தெளிவாக இருக்கிறது. அடிப்படை கொள்கைகளில் சமரசம் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் எங்கள் ஆதரவு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் சமயசார்பற்ற, சமூக நீதியை மதிக்கும் ஒருவருக்கே என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம். பதவிகளை விட எங்களுக்கு கொள்கைகளே முக்கியம். நாட்டு நலனை காக்க, சமூக நீதி சக்திகளுடன் இணைந்து இவ்விஷயத்தில் செயலாற்றுவோம். இவண். M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 22_06_17

நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் .!
மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முதலமைச்சரிடம் நேரில் கோரிக்கை.! இன்று மஜக பொதுச் செயலாளரும் , நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்களை , மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் இஃப்தார் விருந்து தொடர்பாக அழைத்து பேசினார் . அப்போது மாடு விற்பனை குறித்தும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் அது தொடர்பாகவும், அது தொடர்பாக விவசாயிகளின் சிரமங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். பிறகு நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இவற்றை குறித்து கொண்ட முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார் . தகவல: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 21.06.2017
நாகை தாமரைக்குளம் சீரமைக்கப்படும்! அமைச்சர் MLAவுக்கு உறுதிமொழி!
இன்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை மானியம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பினார். "நாகப்பட்டினத்தில் மழையால் இடிந்து விழுந்த தாமரைக்குளத்தின் கரைகளை சீரமைத்துத் தர 2.75 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை இந்த அரசு செய்து தருமா? " என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுதி அளித்தார். நாகை மக்களின் முக்கிய கோரிக்கையான இது MLA அவர்களின் துரித முயற்சியால் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 21.06.2017