TVS குழுமத்தின் தொழில் அதிபர் சகோ.டாக்டர். ஹைதர் அலி அவர்களை மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல செயளாலர் சகோ. முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்களும், மண்டல ஆலோசகர் சகோ. திருபுவனம் முசாவுதீன் அவர்களும், மண்டல பொருளாலர் சகோ. நீடூர் நபீஸ் அவர்களும் மண்டல செயற்குழூ உறுப்பினர் சகோ.சீனி முஹம்மது ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. *மனிதநேய கலாச்சார பேரவை* *மனிதநேய ஜனநாயக கட்சி* குவைத் மண்டலம். 55278478-55260018-60338005.
வளைகுடா
வளைகுடா
குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் சந்திப்பு.
நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் சகோ. நெல்லை வாஹித் அவர்களை மனிதநேய கலாச்சார பேரவை(மஜக) குவைத் மண்டல ஆலோசகர் சகோ.திருபுவனம் முஷாவுதீன் அவர்களும் குவைத் மண்டல பொருளாலர் சகோ.நீடூர் நபீஸ் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் மனிதநேய கலாச்சார பேரவை. மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம். 55278478 - 55260018 - 60338005.
ரியாத் (பத்தாஹ்வில்) மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இன்று 8/04/206 வெள்ளிக்கிழமை காலை 10-மணியளவில் ரியாத் [பத்தாஹ்வில்] மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 1:மனிதநேய கலாச்சார பேரவை விரைவில் ரியாத்தில் கிளைகள்ளை அதிகம் அமைப்பது.. 2:அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் உறுப்பினர் அட்டை வழங்குதல். 3:வேட்பாளர்கள்லாக அறிவித்துள்ள பொதுச் செயலாளர் தமிமூன் அன்சாரி அவர்கள்ளும் ஹாரூன் ரசீது அவர்கள்ளும் வாழ்த்துக்கள்ளை தெரிவித்துக் கொள்கிறோம் அவர்கள் வெற்றி பெற அனைத்து உதவியும் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது... மேலும் ரியாத் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் அவர்கள் அனைத்து நிர்வாகிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி அட்டை வழங்கினார். இன்று நடைபெற்ற நிர்வாக கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவன் மனிதநேய கலாச்சார பேரவை ஊடகப்பிரிவு ரியாத்
குவைத்தில் நடந்த ம.ஜ.க.வின் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு…
மார்ச்.18.,வளைகுடா நாடுகளில் மனிதநேய கலாச்சார பேரவை என்ற பெயரில் இயங்கும் மனிதநேய ஜனநாயக கட்சி பல்வேறு நாடுகளில் தன் பணிகளை ஆற்றிவருகிறது. குவைத்தில் வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமை மாநாடு 18-03-2016 அன்று ம.க.பேரவை மண்டல தலைவர் முத்துக்காப்பட்டி ஹாஜா தலைமையில் நடைபெற்றது. ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில செயலாளர் ராசுதீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
ஒரு வரலாறு உருவாகிறது.! மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி கடிதம்
#பேரன்புக்குரிய_மனிதநேய_சொந்தங்களே .. #ஏக_இறைவனின்_அமைதியும் , #சமாதானமும்_உரித்தாகுக ! உயிருக்குயிரான உங்களுக்கு ஒரு மடல் எழுத வேண்டும் என்று பல நாட்களாக முயன்று , அது இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது . கடுமையான மன அழுத்தங்கள் , ஓய்வற்ற பயணங்கள் , இடைவிடாத அலைப்பேசி அழைப்புகள் , தொடர்ந்து நிகழும் மக்கள் சந்திப்புகள் என தினமும் இயங்க வேண்டியிருக்கிறது . அவற்றுக்கு மத்தியில் தான் ஒரு நள்ளிரவில் இம்மடலை வரைகிறேன் . உங்களோடு பேசும்போதும் , உங்களுக்காக உழைக்கும் போதும் , உங்களுக்காக எழுதும் போதும் மனமும் ,உடலும் சோர்விலிருந்து விடுபட்டு சிறகு முளைத்த மகிழ்ச்சியில் குதூகலிக்கிறது என்பதே உண்மை . #சொந்தங்களே…! கடந்த அக்டோபர் 6 - 2015 தொடங்கி நாம் நடத்தி வந்த உட்கட்சி ஜனநாயகத்திற்கான போராட்டம் கடந்த பிப்ரவரி 25 – 2016 அன்றுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது . எத்தனையோ உண்மைகளும் , நியாயங்களும் புதைக்கப்படலாம் . ஆனால் நியாய தீர்ப்பு நாளில் இறைவனுக்கு முன்னால் அவற்றை நாம் முன்னிறுத்துவோம் . இந்த 4½ மாதங்களில் வன்முறைகள் , அவதூறுகள் , அராஜகங்கள் ஆகியவற்றை துணிச்சலோடு எதிர்கொண்டோம்