அக்.24, மஜக வின் வெளிநாட்டு பிரிவான குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை (MKP) சார்பாக நேற்று (23/10/2020) தலைநகர் முர்காப் பகுதியில் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் அவர்கள் முன்னிலையில் மண்டல துணை செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி அவர்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் முகக் கவசங்கள் விநியோகத்தை துவக்கி வைத்தார். வெள்ளிக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் உறவுகளை சந்தித்து அளவளாவ குழுமியிருந்தவர்கள் மத்தியில் முகக் கவச விநியோகம் நோயின் தீவிரத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக அமைந்தது. வேலை இழப்பினால் துயருறும் தொழிலாளர்கள், சில பகுதிகளில் முகக்கவசம் கிடைக்காமல் அவதியுறுபவர்கள் மட்டுமின்றி MKP முன்னெடுத்திருக்கும் இலவச முகக்கவசம் வழங்கும் பணியினால் 400 க்கும் அதிகமானோர் பயனடைந்ததுடன் இப்பணியை தொடர வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். இந்நிகழ்வில் குவைத் மண்டல துணை செயலாளர் வேலம்புதுக்குடி சர்புதீன், மண்டல மருத்துவ சேவை அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர், மண்டல வணிகர் அணி செயலாளர் SS நல்லூர் யாசின் மற்றும் திருவாடுதுறை ஆசிக் உள்ளிட்ட மஜகவினர் பங்கேற்று முகக்கவசங்களை அனைவருக்கும் விநியோகம் செய்தனர். தகவல், #மனிதநேய_கலாச்சார_பேரவை #MKPitWING #குவைத்_மண்டலம்.
வளைகுடா
வளைகுடா
இணையவழி MKP கத்தார் மண்டல பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி. மஜக இணைப் பொதுச்செயலாளர் JS ரிபாயி பங்கேற்று சிறப்புரை!
மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) கத்தார் மண்டலம் சார்பாக இணைய காணொளி வாயிலாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S ரிபாயி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரையில், நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து நபிகளாரின் வாழ்க்கை வரலாறுகளை மேற்கோள்காட்டியும், இதுவே இந்த ரமலான் நமக்கு கற்று தந்த பாடமாக இருக்கும் எனவும், அரவணைப்போடும், அனுசரனையோடும் உற்சாகமாக பணியாற்றிடுமாறு தனது உரையில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கத்தார் மண்டல MKP யின் செயல்பாடுகள் குறித்து மண்டல துணைச்செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசீன் பேசினார். இந்நிகழ்வில், கத்தார் மண்டலச் செயலாளர் தைக்கால் சகாபுதீன், பொருளாளர் மஞ்சகொல்லை ஃபார்மானுல்லாஹ், துணைச்செயலாளர்கள் சிதம்பரம் நூர் முகம்மது, திருச்சி நசீர் பாஷா, பரங்கிப்பேட்டை ஃபாரூக் மற்றும் நிர்வாக குழு நிர்வாகிகளான முஹம்மது உவைஸ், அப்துல் ராஜ்ஜாக், அப்துல் ஃபத்தாஹ், சுபைர், இக்பால், முன்னாள் துஹைல் மாநகர பொருளாளர் அத்திக்கடை பாரூக் மற்றும் தாயக நிர்வாகிகளும், துபாய், குவைத் நிர்வாகிகளும், சகோதர அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர் திருப்பத்தூர் நிசார்
கத்தாரில்_சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட MKP நிர்வாகிகள்
தோஹா.மே.28., கத்தாரில் நெல்லை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 நபர்கள் வேலைதேடி வந்த இடத்தில் ஏஜன்டால் ஏமாற்றபட்டு தனது ஸ்பான்ஸரும் கைவிட்ட நிலையில் ஓரு வாரமாக சரியாக உணவின்றி, தங்க இடமின்றி தவித்து வந்தனர். தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் மற்றும் மஜக அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் கத்தார் மண்டல துணைச் செயலாளர் கஃதீர் ஆகியோர் கைவிடப்பட்ட நபர்கள் இருந்த இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து. உடனே அந்த 5 நபர்களையும் இந்திய தூதரகத்திற்கு அழைத்துச் சென்று முறையாக புகார் அளித்துவிட்டு தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர் மேலும் அவர்கள் தாயகம் செல்லும் வரை உணவு மற்றும் தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர். நெல்லை அப்துல் அஜீஸ் உடனிருந்தார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம் 29.5.2020
கத்தார் QISF விழிப்புணர்வு நிகழ்ச்சியில் MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!
தோஹா.டிசம்பர்.29., கத்தார் மன்சூரா பகுதியில் QISF தமிழக பிரிவு சார்பாக "புதிய சட்டத்திருத்தங்களும், பறிக்கப்படும் உரிமைகளும்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) மண்டலச் செயலாளர் கீழக்கரை முஹம்மது ஹூசைன் தலைமையில் MKP மண்டல, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் MKP சார்பில் திருப்பத்தூர் நிஸார் CAA, NRC போன்ற சட்டங்களால் நடக்கும் அநீதிகளை எடுத்துரைத்தார், அதைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை அப்துல் ரஜ்ஜாக் பாசிச சித்தாந்தத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து கருத்துரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ்நாடு PFI-யின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ இலியாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். தாயகத்தை போல இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக QMF, IQIC, QITC, ஆயங்குடி ஜமாத் மற்றும் இதர அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியை QISF நிர்வாகி சகோதர் ரிஸ்வான் தலைமையில் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். தகவல்;- #MKP_IT_WING #மனிதநேயகலாச்சாரபேரவை. #கத்தார்_மண்டலம் 27/12/2019
மனிதநேய கலாச்சார பேரவை துபாய் மாநகர நிர்வாக ஆலோசனை கூட்டம்!
டிச.28, மனிதநேய கலாச்சார பேரவையின் துபாய் மாநகர நிர்வாகிகள் கூட்டம் MKP அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமையிலும், அமீரக கொள்கைப்பரப்பு செயலாளர் Y.அப்துல்ரஜாக் அவர்கள் முன்னிலையில் அமீரக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமீரக செயலாளர் ஒப்புதலின் பேரில் எதிர்வரும் 2020 வருடத்திற்கான துபாய் மாநகர நிர்வாகிகளாக, துபாய் மாநகர செயலாளர்: V.ஷபீக்குர் ரஹ்மான் பொருளாளர்: Y.பையாஜ் அஹமது துணைச் செயலாளர்கள்: A.சித்திக், ஹம்தான், K.M.அஸாருதின், Y.சலீம், செயற்குழு உறுப்பினர்கள் : 1.ஆசிக் 2.ரியாஹ் அஹமது 3.மர்ஜுக் 4.சையது இப்ராஹிம். 5.அர்ஸாத் அஹமது 6.G.கோகுல் 7.ஜாசிம் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்: N.சபீர் அகமது உள்ளிட்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வாகியுள்ளனர். அமீரக செயலாளர் பேசும் போது, துபாய் மாநகர செயலாளராக B.ரஹமத்துல்லா அவர்களின் கடந்த இரண்டாண்டு செயல்பாடுகள் அனைவரும் பாராட்டும் படி இருந்ததாகவும், புதிய பணி நிமித்தமாக அபுதாபி செல்வதற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன் புதிய நிர்வாகமும் அதைப் போல் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில், அமீரக மற்றும் துபாய் மாநகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தகவல்: #மனிதநேயகலாச்சாரபேரவை #தகவல்தொழில்நுட்பஅணி #MKP_IT_WING | #துபாய்_மாநகரம். 27/12/2019