நாகை.மார்ச்.24., நாகை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி-யின் திருமருகல் ஒன்றிய துணை செயலாளர் ஏனங்குடி_நூருல்_ஷமீம் அவர்கள் பல்வேறு விபத்துக்கள் மற்றும் அவசர தேவைகள் ஏற்படும் போது துரிதமாக செயல்பட்டு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்க்காக "சிறந்த சமூக சேவைக்கான" விருது 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மூலமாக தீயணைப்பு அதிகாரி முன்னிலையில் #திருவாரூர்_DSP அவர்களால் வழங்கப்பட்டது. #சகோதரர் சமூக சேவையில் தொடந்து பயணிக்க இறைவனிடம் பிராத்திக்கிறோம். மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி, MJK IT WINK திருமருகல் ஒன்றியம், நாகை தெற்கு மாவட்டம். 24.3.17
தமிழகம்
தமிழகம்
பல்கலைக்கழகங்களில்_சமூக_நீதி!
(இன்று சட்டமன்றத்தில் M.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் ஒரு பகுதி) பேரவை தலைவர் அவர்களே.... தமிழ்நாட்டில் 21 பல்கலைக்கழகங்களில் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லை.8 பல்கலைக்கழகங்களில் பதிவாளர் இல்லை.10 பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் (exam controller) இல்லை. இதில் சமூக நீதி பேணப்பட வேண்டும்.இது சமூக நீதியை மதிக்கும் அம்மாவின் அரசு.எனவே முஸ்லிம்களுக்கும்,கிறித்தவர்களுக்கும்,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும் உரிய ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். என கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 23_03_17
சிறைவாசிகளை விடுதலை செய்க! சட்டமன்றத்தில் மீண்டும் தமிமுன் அன்சாரி MLA_பேச்சு!
சட்டமன்ற உரை : பேரறிவாளன் தாயார் வீரமங்கை #அற்புதம்மாள் அவர்கள் இரு தினங்களுக்கு முன்பாக பேரறிவாளனின் விடுதலை குறித்து நமது முன்னாள் #முதல்வர்_அம்மா அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை இந்த அவைக்கு நினைவூட்டி, மனிதாபிமான அடிப்படையில் அவரின் விடுதலைக்கு நாம் உதவிட முயற்ச்சிகளை எடுக்க வேண்டும். 14 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளை, சமூக வழக்குகள் உட்பட எந்த வழக்கில் தண்டனைப் பெற்றிருந்தாலும், சாதி, மத, அரசியல் பேதமின்றி அவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பாஷா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 23_03_17
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் டிடிவி.தினகரன் அறிமுக நிகழ்ச்சி…
சென்னை.மார்ச்.22., ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களை அறிமுக செய்யும் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தோழமை கட்சியின் தலைவர்களும் பங்குபெற்றார்கள்.அதில் டி.டி.வி.தினகரன் அவர்களை அறிமுகப்படுத்தி மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி_MLA ,அவர்கள் உரையாற்றினார்கள். மனிதநேய ஜனநாயக கட்சி அவரது வெற்றிக்கு இத்தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் என்பதையும் பலத்த கைத்தட்டலுக்கு இடையே அறிவித்தார்கள். மேடையில் முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளரிடம் பேசும்போது இத்தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினுடைய சிறப்பான களப்பணியை தாம் அதிகம் எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.அதேபோன்று வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அவர்களும் இத்தொகுதியில் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை அதிகமாக பிரச்சாரத்திற்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இவண், ஆர்.கே.நகர் தொகுதி மஜக தேர்தல் பணிக்குழு
தலைமையக நியமன அறிவிப்பு.
மனிதநேய ஜனநாயக கட்சியின் #தகவல்_தொழில்நுட்ப_அணி நிர்வாகத்திற்கு ( #MJK_IT_Wing ) கீழ்கண்டவர்கள் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். #முதல்_பட்டியல் 1) கோவை மாவட்டம் : M.சம்சுதீன் கோவை - 641026 அலைபேசி/ வாட்ஸ்அப் : 9655533723 2) திருச்சி மாவட்டம் : அ.முஹம்மது அலி (சேட்) தென்னூர், திருச்சி-17 அலைபேசி/ வாட்ஸ்அப் : 8973773332 3) திருவாரூர் மாவட்டம்: M.முகம்மது அசாருதீன் பொதக்குடி, திருவாரூர் மாவட்டம், அலைபேசி / வாட்ஸ்அப் 9659168272 4) நாகை தெற்கு மாவட்டம் : A.முஹம்மது அபுபக்கர் சித்திக், திட்டச்சேரி, அலைபேசி/வாட்ஸ்அப் : 9487658305 5) திண்டுக்கல் மாவட்டம் : அனஸ் முஸ்தபா (எ)சையது முஸ்தபா, பேகம்பூர். அலைபேசி : 8838581818, வாட்ஸ்அப் 9578017786 6) நாகை வடக்கு மாவட்டம் : எம்.ஜெஹபர் அலி, நெய்வாசல், மயிலாடுதுறை தாலுக்கா, வாட்ஸ்அப்/மொபைல்: 9486991613 7) தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் : R.சேக் முகம்மது ரியாஸ், கும்பகோணம். அலைபேசி/வாட்சப்:9500782587 மனிதநேய சொந்தங்கள், மேற்கண்ட நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 22.03.2017