சென்னை.ஆக.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் நேற்று (04-08-2017) நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் A.முஹம்மது ஹாலித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் M.Y.பிஸ்மில்லாகான், துணைச் செயலாளர்கள் பீர் முஹம்மது, ரவுப் ரஹீம், வர்த்தகர் அணிச் செயலாளர் அப்பாஸ் மற்றும் தொழிலாளர் அணி செயலாளர் முஸாகனி ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பல சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மத்திய சென்னை மாவட்டம் 04.08.2017
தமிழகம்
தமிழகம்
குடியாத்தம் நகராட்சி ஆணையரிடம் மஜக நிர்வாகிகள் மனு..! வார்டுகளில் ஆணையர் நேரில் ஆய்வு..!!
வேலூர்.ஆக.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேலூர் (மேற்கு மாவட்டம்) குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36- வார்டுகளில் குப்பைகள் தூர்வாரப்பட வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத தெருக்களில் சாலைகள் போடுவதுற்க்கும், கால்வாய் அமைக்கவும், கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகளில் சீரமைப்பு செய்யவும் நகராட்சி ஆணையரிடம் சில தினங்கள் முன்பு மனு அளிக்கப்பட்டது. மஜக கோரிக்கை ஏற்று முதல் கட்டமாக MBS-நகர் 8- வது வார்டு பகுதிகளில் குடியாத்தம் நகராட்சி ஆணையர் சங்கர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சதீஷ், சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தார்கள். இப்பகுதியில் உள்ள சுகாதார சீர்கேடு குறித்து சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகள், கால்வாய்கள், கழிவுநீர் தேங்கி உள்ள இடங்களில் சீர் செய்து 15 நாட்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். உடன் மஜக நகர செயலாளர் S.அனீஸ், நகரபொருளாளர் முபாரக் அஹமத், நகர துணை செயலாளர் சலீம் மற்றும் கிளை நிர்வாகிகள் அல்தாப், கபீர், முன்னா, அபுல், சேட்டு, அலீம் ஆகியோர் உடனிருந்தார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING வேலூர் (மேற்கு) மாவட்டம். குடியாத்தம் நகரம் 04.08.2017.
ஈரோடு மாவட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் சுற்றுப்பயணம்.!
ஈரோடு.ஆகஸ்ட்.04., ஈரோடு மாவட்டத்திற்கு நேற்று (03-08-17 ) மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து மஜக வினரை உற்சாகப்படுத்தினார். அடுத்ததாக பவானி நகருக்கு வருகை தந்தவர் அங்கிருக்கும் மஜக அலுவலகத்திற்கு வருகை தந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து அங்கு நடைபெறும் கட்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்து அங்கிருந்து விடைபெற்றார். பிறகு அந்தியூருக்கு சென்ற பொதுச்செயலாளர் அவர்களை பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் சிறப்பான முறையில் வரவேற்றனர். வக்பு நிலம் ஆக்கிரப்பில் உள்ளதை பொதுச்செயலாளருக்கு புகார் மனுவாக கொடுத்தனர். பிறகு அங்கு ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு இடங்களை பார்வையிட்டு, தந்த புகாரையும் ஆய்வு செய்து இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் அமைச்சர் பெருமக்களிடமும் கொண்டு செல்வதாகவும் கூறினார். பிறகு சத்தியமங்கலம் வருகை தந்தவர் அங்கிருந்த பள்ளிவாசலுக்கு சென்றவர் ஜமாத் பெரியவர்களிடமும் இளைஞர்களிடமும் சமுதாய நலன் சார்ந்த கலந்துரையாடலை முடித்து விட்டு, மஜக துணைப் பொதுச் செயலாளர் செய்யது அகமது பாரூக் அவர்களின் வீட்டிற்கு சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது மாநில துணைச்செயலாளர் ஈரோடு பாபு ஷாஹின்ஷா அவர்களும், மாநில விவசாய அணிச்செயலாளர் நாகை முபாரக் அவர்களும், மாநில
தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வில் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் முழக்கம்! காங்கேயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!
திருப்பூர்.ஆக.03., இன்று தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் காங்கேயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தனியரசு MLA , மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , முக்குலத்து புலிபடை தலைவர் சேது.கருணாஸ் MLA ஆகியோர் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக எழுச்சியுரையாற்றினர். தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது தீரன் சின்னமலையை சமூக நல்லிணக்கத்தின் முன்னோடி என வர்ணித்தார். தீரன் திப்புசுல்தானும் , தீரன் சின்னமலையும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியது குறித்து உயிரோட்டத்தோடு எடுத்து கூறினார். நெப்போலியனுக்கு திப்பு சுல்தான் தூதுக்குழு அனுப்பியபோது அதில் தீரன் சின்னமலையின் மெய்க்காப்பாளரும் , தேவர் சமுதாயத்தை சேர்ந்தவருமான கருப்பசேர்வை இடம் பெற்றிருந்ததை நினைவு கூறினார். அதுபோல் தீரன் சின்னமலையின் படையில் கருப்பசேர்வை , ஓமலூர்.சேமலை படையாச்சி , முட்டுக்கட்டை. பெருமாள்தேவன் , ஃபத்தே முகமது உசேன் உள்ளிட்ட தேவர், கவுண்டர், வன்னியர், நாயக்கர், நாடார், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர்கள் என பல சமூகத்தினரும் இருந்ததை பட்டியலிட்டார். ஐதர் அலிக்கும் , வேலு நாச்சியாருக்கும் இடையே இருந்த இராணுவ சகோதரத்துவ உறவையும், வேலு நாச்சியாரின் மெய்க்காப்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை
உமறுப்புலவருக்கு விழா! தமிழக முதல்வருக்கு மஜக பொதுச் செயலாளர் நன்றி…
சென்னை.ஆக.03., தமிழில் 13-ம் நூற்றாண்டுக்கு பிறகு பெருங்காப்பியங்கள் எழுதப்படவில்லை. 16-ம் நூற்றாண்டில் தான் உமறுப்புலவர் அவர்கள் கீழக்கரையின் வள்ளல் சீதக்காதி உதவியோடு சீறாப்புராணம் நூலை எழுதி அந்த குறையை தீர்த்தார். அவருக்கு வருடம் தோறும் தமிழக அரசு விழா எடுக்கும் என்ற கோரிக்கையை வலியுறுத்துமாறு எட்டயபுரத்தை சேர்ந்த உமறுப்புலவர் சங்கத்தினர் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA விடம் கோரிக்கை வைத்தனர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி உமா மகேஸ்வரி அவர்களும் இதை வலியுறுத்தினார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இக்கோரிக்கையை M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வலியுறுத்து பேசினார். முதல்வரிடமும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து தமிழக அரசு உமறுப்புலவருக்கு வருடந்தோறும் அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து முதல்வரை சந்திக்க, உமறுப்புலவர் சங்கம், இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகியவற்றின் சார்பில், மஜக பொதுச் செயலாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்க விருப்பதால் தன்னால் வர இயலாது என தெரிவித்தார். இந்நிலையில் தனது கோரிக்கையை ஏற்று உமறுப்புலவருக்கு அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்ததற்காக முதல்வர் எடப்பாடி கே