IKP ரியாத் மண்டலதுணை செயலாளர் தோப்புத்துரை ஷேக்தாவூது அவர்களுடைய தகப்பனார் ஹாஜா அவர்கள் கடந்த சில தினங்கள் முன்பு மரணமடைந்தார்கள். அவர்கள் மறைவுக்கு மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சகோதரர் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள். தகவல்; #IKP_தகவல்_தொழில்நுட்ப_அணி, #IKP_IT_WING #ரியாத்_மண்டலம் 27-08-2017
தமிழகம்
தமிழகம்
திருப்பூரில் மாணவர்களை ஈர்த்த மாணவர் இந்தியா..!
திருப்பூர்.ஆக.28., திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்களான கெளசிதன், கார்த்திக், அஜாஸ், அஸ்கர் ஜபார் ஆகியோர் மாணவர்கள் உரிமைக்கான போராட்டங்களில் சமரசம் செய்யாமல் போராடும் மாணவர் இந்தியா அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டனர்.. தகவல்; மாணவர் இந்தியா ஊடக பிரிவு திருப்பூர் மாவட்டம் 27-08-2017
மஜக திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
திருப்பூர்.ஆகஸ்ட்.27., இன்று மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமை தாங்கினார், இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் காதர்கான், மாநில செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான், வெங்கமேடு மீரான், பெரியதோட்டம் அப்பாஸ் ஆகியோருடன், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நவ்பில் ரிஜ்வான் மற்றும் திருப்பூர் மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தற்போது மக்கள் மத்தியில் மஜகவிற்கு ஏற்பட்டுள்ள வரவேற்பை முறையாக பயன்படுத்தி கட்சிக்கான உட்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் எனவும், வரும் வெள்ளிக்கிழமை அன்று புறநகர் பகுதியில் நிர்வாகம் அமைக்க வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்பட்டது. தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #திருப்பூர்_மாவட்டம். #MJK_IT_WING 27_08_2017
காயல்பட்டினம் இளைஞர் படுகொலை..! குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய மஜக பொதுச் செயலாளர் வலியுறுத்தல்…!!
தூத்துக்குடி.ஆக.27., நேற்றிரவு திருச்செந்தூரிலிருந்து ஆறுமுகநேரி வழியாக சென்னைச் செல்லும் எஸ்.ஆா்.எம். தனியார் பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் அப்பாப்பள்ளித் தெருவைச் சேர்ந்த பத்ருத்தீன் அவர்களின் மகன் மீராத்தம்பி என்பவர் பயணத்திருக்கிறார். அதே பேருந்தில் தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்யை சேர்ந்த சமூக விரோதிகளான ரவுடிகள் இரண்டு பேர் குடிபோதையில் பேருந்தில் பயணித்துள்ளனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி குடிபோதையில் இருந்தவர்கள் வாந்தி எடுக்க அது மீரா தம்பி மீது தெறிக்க, வண்டியை ஓரமாக நிறுத்தி வாந்தி எடுத்திருக்க லாமே....என்று சொல்ல சற்று வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் பயணம் தொடர, தூத்துக்குடியில் வண்டி நிறுத்தப்பட, தனது உடையை சுத்தம்செய்யவும், சிறுநீர் கழிப்பதற்காகவும் வண்டியை விட்டு கீழே இறங்கியவரை பின் தொடர்ந்த ரவுடிகள், நொடிப் பொழுதில், கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தி விட்டு இருளில் மாயமாய் மறைந்து தப்பி ஓடி விட்டனர். அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காவல் துறைக்கு தகவல் போக விரைந்து வந்த காவல்துறை யினர், மரணித்தவரை தூத்துக்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தின் மேல் நடவடிக்கைக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமாகிய தமீமுன் அன்சாரி அவர்கள் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளிடத்திலும், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்துள்ளனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம். 27.08.17
நீட் தேர்விற்கெதிராக ஓமந்தூரார் தோட்டத்தை முற்றுகையிட்ட மாணவர் இந்தியாவினர் கைது..!
சென்னை.ஆக.27., சமூக நீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில கல்வி உரிமைக்கும் எதிரான நீட் தகுதித்தேர்வை மத்திய அரசு திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகி, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கையும் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெற்று வருகின்றது. நீட் தேர்விற்கு எதிராகவும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதை கண்டித்தும் ஓமந்த்தூரார் தோட்டம் முன் மாணவர் இந்தியா சார்பில் மாணவர் முற்றுகை போராட்டம் இன்று காலை நடைபெற்று ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இப்போரட்டத்திற்கு மாணவர் இந்தியாவின் மாநில செயலாளர் A.அசாருதீன் தலைமை தாங்கினார், உடன் மாநில பொருளார் A.ஜாவித் ஜாபர், மாநில துணைச் செயலாளர்களான SG.அப்சர் சையத், S.பஷிர் அஹமத் மற்றும் மாவட்ட நிர்வாகிகளான N.கபிர் அஹ்மத், I.அலாவுதீன், KM.அன்வர் இஸ்மாயில் , V.ரமேஷ், ஊடக பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டு கைதாகினர். இப்போரட்டத்தில் கைது செய்யப்பட்டோரை மஜக-வின் மாநில செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார். உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பங்கேற்றார். தகவல்; ஊடகபிரிவு, மாணவர் இந்தியா தலைமையகம், சென்னை 27.08.17