சென்னை.ஆக.30., சென்னை அண்ணா சாலை தாயார் சாஹிப் தெருவில் அமைந்திருக்கும் அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளிக்கு பதினொன்னு மற்றும் பனிரெண்டாம் (11 & 12) வகுப்புகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களிடம் அப்பள்ளியின் நிர்வாகிகள் கடந்த சில தினங்கள் முன்பு தெரிவித்து இருந்தனர். அதை அடுத்து பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் இந்த கோரிக்கை கொண்டு செல்லப்பட்டு அதை நிறைவேற்றப்பட்டது, தற்போது அந்த பள்ளியில் 11 & 12ம் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் (PTA- Parents Teachers Association) தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய தலைவர் தமிஜுத்தீன், துணைத் தலைவர் பீர் முஹம்மது , பொருளாளர் அக்பர் மற்றும் நிர்வாகிகள் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர்களை நேரில் சந்தித்து பள்ளியின் வளர்ச்சிக்காக அனைத்து வகையிலும் உதவி செய்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK-IT-WING தலைமையகம். சென்னை. 29.08.17
தமிழகம்
தமிழகம்
மஜக கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் !!
கோவை.ஆக.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், ABT.பாருக், இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 1.மஜக மாவட்டநிர்வாகத்தின் சார்பில் விரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, 2.நீட் தேர்வுவிவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாணவர் இந்தியா சார்பாக 1000கண்டன சுவரொட்டிகள் ஒட்டுவது என தீர்மானிக்கப்பட்டது, 3.அணி நிர்வாகங்களை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது, 4.பகுதி மற்றும் நகர கிளை நிர்வாகங்களை மாவட்ட நிர்வாகம் நேரடியாக சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனைசெய்வது என தீர்மானிக்கப்பட்டது. தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 29.08.17
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அவசர ஆணையை ரத்து செய்யவேண்டும்…! தமிழக அரசுக்கு மஜக துணைப் பொதுச் செயலாளர் கோரிக்கை..!!
(மஜக துணைப் பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர் வெளியிடும் அறிக்கை...) எந்தவித அடிப்படையும் இல்லாமல் பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் விதமாக தமிழக அரசு அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன பயன்பாட்டின் போது வைத்திருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருப்பது மிகவும் கண்டனத்திற்க்குரியது. கட்டுப்பாடு என்கிற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கவே இந்த ஆணை பயன்படும். இந்த சட்டத்திற்க்கும், விபத்துகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது சராசரி அறிவுள்ளவர்களுக்கே புரியும் போது, அரசு ஆணைக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரிகளுக்கு புரியாமல் இருப்பது ஆச்சிரியமே. அசல் உரிமம் வைத்திருந்தால் விபத்து குறையும் என்பது எவ்வித வகையிலும் அடிப்படையற்றது. ஏற்கனவே தெர்மாகோல் விஷயத்தில் அரசு கடும் விமர்சனத்திற்க்குள்ளானதையும், அதேபோல் அடிப்படையற்ற, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்த ஆணையும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்குள்ளாகும் என்பதையும் புரிந்து தமிழக அரசு தேவையற்ற இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இவன்; AK.சுல்தான் அமீர் மாநில துணைப் பொதுச்செயலாளர். மனிதநேய ஜனநாயக கட்சி. 29.08.17
பேரறிவாளன் பரோலுக்கு நன்றி..! சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை..!! முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், TTV-யுடன் மூன்று கட்சி தலைவர்கள் சந்திப்பு..!!!
சென்னை.ஆக.29., பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் சார்பில் சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது, அது மக்கள் கருத்தாகவும் மாறியது. தற்போது பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்துள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து மூன்று கட்சி தலைவர்களான M.தமிமுன் அன்சாரி MLA, உ.தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி கூறினர். உங்கள் மூன்று பேரின் கோரிக்கைகளை ஏற்றே இந்த அரசு செயல்படுத்தியதாக முதல்வர் தெரிவித்தார். அப்போது MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 3 MLA க்களும் முதல்வரிடம் வலியுறுத்தினர். 10 ஆண்டுகளா? 14 ஆண்டுகளா? என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாகவும் முதல்வர் மூன்று தலைவர்களிடமும் விளக்கினார். இதில் அரசியல், வழக்கு, சாதி, மத பேதமின்றி கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றதற்கு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி செயல்படுவோம் என்றும் முதல்வர் கூறினார். அச்சந்திப்பிற்கு மூன்று கட்சிகளின்
மமக மாநில பொருளாளரை சந்தித்து உடல்நலம் விசாரித்த மஜக மாநில பொருளாளர்…
சென்னை.ஆக.29., மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று உடல் நலம் விசாரித்தார். இச்சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சென்னை. 28.08.17