புதுகை. ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அறந்தாங்கி வர்த்தகர் சங்க அரங்கில் மாவட்ட செயலாளர் முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜலில் அப்பாஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் முஹம்மது காலித், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஷாஜஹான், அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப், அறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் அப்துல் ரஜாக், அறந்தாங்கி நகர செயலாளர் ஜகுபர் சாதிக், அறந்தாங்கி நகர பொருளாளர் அப்துல் கரீம், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் சைய்யது தாவூத், திருவரங்குளம் ஒன்றிய பெர்ருளாளர் முகமது அப்துல்லாஹ், கீரமங்களம் நகர செயலாளர் முகமது புர்கான், கீரமங்களம் நகர பொருளாளர் இராஜேந்திரன், ஆவுடையார் கோவில் ஒன்றிய செயலாளர் சைய்யது அபுதாஹிர், அவுடையார் கோவில் ஒன்றிய பொருளாளர்
தமிழகம்
தமிழகம்
மஜக திண்டுக்கல் மாவட்ட பொறுப்புக்குழு கூட்டம்..!
திண்டுக்கல்., ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட புதிய பொருப்பு குழுவின் நிர்வாக கூட்டம் பொருப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!!! 1) பொதுசிவில் சட்ட பிரச்சனைக்கு இஸ்லாமியர்களின் உலாமாக்கள் சபையின் சார்பாக (05/01/2018) நடக்க இருக்கும் கண்டன பொது கூட்டத்திற்க்கு நம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்களும், கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அதிகமானோர் கலந்து கொண்டு நமது எதிப்பினை மத்திய அரசுக்கு காட்ட வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது. 2) 22 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கோவை ஜபருல்லா, கோவை அபூ (எ) அபுதாஹீர், திண்டுக்கல் மீரான் மைதீன், ஆகியோர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நீதிமன்றம் உத்தரவிட்டும். இதை அமல்படுத்த மறுக்கும் சிறை துறை நிர்வாகத்தை வண்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 3) திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரம் முதல் சிலுவத்தூர் ரோடு வரையிலும், தாடிக்கொம்பு ரோடு மேம்பாலம் இவை இரண்டையும் போர்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டத்தின்
நாகை MLA அலுவகத்தில் புத்தாண்டு சந்திப்புகள் !
நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை தொகுதி மக்களும் , அதிகாரிகளும், பிரமுகர்களும் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து , கோரிக்கை மனுக்களையும் கையளித்தனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 01.01.18
சிறைவாசிகள் முன் விடுதலை ! தமிழக முதல்வருக்கு மஜக நன்றி!
நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது:- MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் பேசிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதை மஜகவின் சார்பிலும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் வரவேற்க்கிறோம். இதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதுபோல இக்கோரிக்கையை நேர்மையாக அனுகிய சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .C. V. சண்முகம் அவர்களுக்கும், துணை நின்ற அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சட்டமன்றத்தில் எங்களோடு இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விடுதலையால் சாதி, மத, வழக்கு பேதமின்றி அனைத்து கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம். இதை மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அரசு, குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் கருணையோடும், கனிவோடும், மனிதாபிமானதத்தோடு பரிசிலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பத்திரிக்கையாளர்
சமூக வலைதளங்களில் வந்த கோரிக்கையை நிறைவேற்றிய மஜக..!
கோவை.ஜன.01., கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாநகராட்சி 86 வது வார்டு செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் உடைந்து யாரும் அந்த வழியில் நடந்து செல்லமுடியாத நிலையில் இருப்பதாகவும் மழை காலங்களில் பாம்புகள் வருவதாகவும் செய்தி வந்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதியை மஜக நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியர், அவர்களிடமும் மனு அளித்தனர் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து தற்போது அந்த பகுதியில் சாக்கடை மேல் தளங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று முடிக்கப்பட்டன. அந்த பணிகளை 86வது வார்டு செயலாளர் அரபாத் தலமையில், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் நிர்வாகிகள் கண்காணித்தனர். இப்பணியில் அதிமுக 86வது வார்டு செயலாளர் சித்திக், தொண்டாமுத்தூர் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் குஞ்சாலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களாக அந்த பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை பார்வையிட்டு சில நாட்களுக்குள்ளேயே அந்த பணிகளை நிறைவேற்றி தந்த 86 வது வார்டு மஜக நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 01.01.18