நாகை. ஜன.06., நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்று 05.01.2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சின்னக்கடை வீதியில் நாகை மாவட்ட #ஜமாத்துல்_உலமா சார்பாக பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மெளலவி #JS_ரிபாய்_ரஷாதி அவர்கள் பங்கேற்று கண்டன பேருரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரகணக்கோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சகத்துல்லாஹ், ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுசாலிஹ், சாகுல் ஹமீது, ஜமீல், மிஸ்பாஹூதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெஹபர் அலி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்,நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
தமிழகம்
தமிழகம்
திண்டுக்கல் திணறியது…!
திண்டுக்கல். ஜன.05., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டன பேருரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு திண்டுக்கல் மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் மெளலவி. #PM. முகம்மது_அலி_அன்வாரி_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் பெரியசாமி MLA, CPM சார்பில் பாலபாரதி Ex.MLA உள்ளிட்ட தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மார்க்க அறிஞர்கள் உரையாற்றினர். மாலை5மணி முதல் இரவு 10 மணிவரை பல்லாயிரகணக்கான மக்கள் 3பக்கமும் திரண்டு நின்றது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திண்டுக்கல்_மாவட்டம். 05.01.2018
திருச்சி திணறியது…
திருச்சி. ஜன.05., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முதகலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் இன்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கண்டான் பேருரை ஆற்றினார். இந்நிகழ்வுக்கு திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலாமா தலைவர் அல்ஹாஜ். #நூருல்_ஹக்_ஹஜ்ரத் அவர்கள் தலைமை வகித்தார். இதில் இனாம் குளத்தூர் அல்ஹாஜ். சாகுல் ஹமீது ஹஜ்ரத் உள்ளிட்ட இமாம்களும், சமூக ஆர்வலர்களும் உரையாற்றினார். இதில் பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருச்சி_மாநகர்_மாவட்டம். 05.01.2018
மஜக தலைமையக நியமன அறிவிப்பு!
மனித நேய ஜனநாயக கட்சியின், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில துணைச் செயலாளராக AST.கலீம், சென்னை (8148000786) நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவன், எம். தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 04-01-2018
மஜக திண்டுக்கல் மாவட்டம் பொறுப்பு குழு ஆலோசனை கூட்டம்…!
திண்டுக்கல்.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட ஆலோசனை கூட்டம் பொறுப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா தலைமையில், பொறுப்புக்குழு உறுப்பினர் M.அனஸ் முஸ்தபா முன்னிலையில் கடந்த 02.01.2018 அன்று நடைபெற்றது. இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1) உலாமாக்கள் நடத்தும் ஷரியத் விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் நோட்டீஸ், பிளக்ஸ், வால்போஸ்ட்டர், ஆட்டோ விளம்பரம், செய்வதென இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் எடுக்கப்பட்டது. 2) பொறுப்பு குழு உறுப்பினர்கள் சார்பில் அனைத்து கிளை நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் நேரில் சந்திக்க இக்கூட்டத்தின் வாயிலாக முடிவு எடுக்கப்பட்டது. 3) திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளான பிலாத்து, வடமதுரை, எஞ்சியுள்ள நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதென முடிவு எடுக்கப்பட்டது. 4) உலாமாக்கள் நடத்தும் ஷரியத் விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு கண்டன உரையாற்ற வருகை தரும் பொதுச்செயலாளர் அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும் பொதுக்கூட்டம் முடிந்தவுடன் பொதுச்செயலாளர் முன்னிலையில் அதிகப்படியான உறுப்பினர்களை இனைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம். 02/01/2018.