சென்னை.டிச.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி நல்லெண்ண வருகை புரிந்தார். அப்பொழுது மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிளை சந்தித்து உரையாடினார். இந் நிகழ்வில் மஜக இணை பொதுச்செயலாளர் KM.மைதீன் உலவி, பொருளாளர் எஸ். எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் JS. ரிபாயி ரஷாதி, துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மண்டலம் ஜெய்னுலாப்தீன், மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA. தைமிய்யா, A. சாதிக் பாட்ஷா, நாச்சிக்குளம் தாஜுதீன் மற்றும் அண்ணன் AS. அலாவுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்
தமிழகம்
தமிழகம்
டிசம்பர் எழுச்சி தொடர்கிறது…! திருவண்ணாமலையில் 250 பேர் மஜகவில் இணைந்தனர்..!!
திருவண்ணாமலை.டிச.16., திருவண்ணாமலை மாவட்டத்தில் மறுமலர்ச்சி தமுமுகவில் முன்பு செயல்பட்டு கொண்டிருந்தவர்கள் 200 பேரும் இதர கட்சிகள், அமைப்புகளை சர்ந்த 50 பேரும் இன்று (16/12/2017) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். முன்னதாக 100க்கும் மேற்பட்ட கார்கள், பைக் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகளை திருவண்ணாமலையின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாவட்டம் முழுவதிலிமிருந்து ஷபீர் அகமது தலைமையில் வருகை தந்தவர்களை மஜக மாவட்ட செயலாளர் ஹாஜா செரீப் வரவேற்று பேசினார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் R.K.நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதை சட்டம் போட்டு, திட்டம்போட்டு தடுக்க முடியாது என்பது நடைமுறையில் தெரிந்துவிட்டது, பொதுமக்கள் சுயமறியாதை உணர்வுடன் செயல்பட்டு பணம் வாங்கமாட்டோம் என சத்தியம் செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார். கவர்னர் அவர்கள் கக்கூஸை ஆய்வு செய்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என மற்றொரு கேள்வியை எழுப்பினர். கவர்னர் தன் எல்லைக்குள் நின்று செயல்பட வேண்டும். அவர் வரம்பு மீறக்கூடாது. அவர் கவர்னர் மாளிகையில் அமர்ந்து கோப்புகளை பார்க்க வேண்டும்.
அய்யா பழ. நெடுமாறன் புத்தகம் தற்போது விற்பனையில்..
சென்னை.டிச.16., அய்யா.பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய "உருவாகாத இந்திய தேசமும், உருவான இந்து பசிசமும்" என்ற நூல் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது. மேடை பேச்சாளர்களும், ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று விரும்பிகளுக்கும் மிகப்பெரிய ஆவண களஞ்சியமாக இந்நூல் தெரிகிறது. இந்நூல் விற்ப்பனையை மஜக தலைமையகத்தில் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மஜக பொருளாளர் எஸ். எஸ். ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் மண்ணை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் உள்ளிடயோர் பங்கேற்றனர். இந்நூலை பெற விரும்புவோர் தொடர்புகொள்க கபீர் - 04443514550 தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
திண்டிவனம் நகரில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி..!
விழுப்புரம்.டிச.16., இன்று திண்டிவனத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுசெயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி அவர்கள் சென்னை - திண்டிவனம் பை-பாஸ் சாலையில் மஜக கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் செயற்குழுவில் பங்கேற்பதற்காக திண்டிவனம் கடந்து செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர்கள் மண்ணை செல்லச்சாமி, மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன், மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முஹம்மத், மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷபி ஆகியோர் இருந்தனர். உடன் விழுப்புரம் மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் J. ரிஸ்வான், மாவட்ட துணை செயலாளர் S.R.ஆதம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் "திண்டிவனம்" M.K.ஷாஹூல் ஹமீத் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் திண்டிவனம் நகர செயலாளர் S. சையத் உசேன், நகர துணை செயலாளர் H.அப்சர் பாஷா, நகர பொருளாளர் M.தமிமுன் அன்சாரி, ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் கலீம் பேக், நகர இளைஞர் அணி செயலாளர் V.கணேஷ் பாபு, நகர இளைஞர் அணி துணை செயலாளர்கள் A .அமீர், S.இஸ்மாயில், நகர தொண்டர் அணி செயலாளர் ஆசிப்கான், மாணவர்
ஆம்பூரில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்..!
வேலூர்.டிச.17,. ஆம்பூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மே மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜஹிருஸ் ஜமா முன்னிலையில் ஆம்பூர் நகர 3-வது வார்டு சார்ந்த சகோதர் அஃபான் தலைமையில் இளைஞர்கள் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் TR. முன்னா (எ) நஸிர், நகர செயலாளர் பிர்தோஸ் அஹமத், மற்றும் நகர துணை செயலாளர் முன்னா, இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி துணை செயலாளர் முதர்ஸீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #ஆம்பூர்_நகரம் #வேலூர்_மே_மாவட்டம் 15.12.2017