தமிழக மக்களின் நலன் காக்கும் நோக்கில் கஞ்சா போதை கும்பலுக்கு எதிராக போராடி கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட அந்த தியாகி வாணியம்பாடி #வசீம்_அக்ரம் அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி, அவரது மனைவி பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் நன்மைகளுக்காக; சமூக தீமைகளுக்கு எதிராக போராடி உயிர் துறந்த அந்த தியாகிக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே இதயம் கனிந்து உங்கள் ஆறுதல் நிதியை கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வசீம் அக்ரம் மனைவியின் வங்கி கணக்கு விபரம். CANARA BANK Account No.8539101063476 Name: S.MOHSEENA TAZEEN IFSC CODE : CNRB0008539 வசீம் அக்ரம் அவர்கள் சகோதரர் அக்மல் : 8122780837 இவண், தலைமையகம், மனிதநேய ஜனநாயக கட்சி
பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி
வசீம் அக்ரம் குடும்பத்திற்கு நிதி உதவி… முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கடிதம்!
கஞ்சா வினியோக கூலிப்படையால் கொல்லப்பட்ட மஜக சகோதரர் வாணியம்பாடி வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியும், அவர் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஒரு அரசு வேலையும் தர வேண்டும் என வலியுறுத்தி மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக முதல்வருக்கு கடந்த செப்.11 அன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் முதல்வரின் தனி செயலாளர் திரு.உதயசந்திரன் IAS அவர்களின் அலுவலகத்தில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 13.09.2021
வசீம் அக்ரம் படுகொலை விவகாரம் DGP உள்ளிட்டோருடன் சந்திப்பு.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..
வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக சகோதரர் வசீம் அக்ரம் வழக்கு தொடர்பாக இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் இன்று DGP அலுவலகம் சென்றனர். காவல் துறை இயக்குனர் திரு.சைலந்திர பாபு அவர்களிடம் எஞ்சிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவது குறித்தும், வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறித்தும் மனு ஒன்றை பொதுச் செயலாளர் அவர்கள் கையளித்தார். பிறகு உளவுத் துறை ADGP திரு.டேவிட்சன் ஆசிர்வாதம், உளவுத் துறை IG திரு.ஈஸ்வர மூர்த்தி ஆகியோரையும் சந்தித்து பேசினர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 13.09.2021
தஞ்சையில் மஜக டெல்டா மண்டல செயற்குழு… கட்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு!
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் நேற்று தஞ்சாவூரில் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மொலா.நாசர், துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தார் ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், புதுக்கோட்டை துரை முஹம்மது, நெய்வேலி இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முகம்மது மஹ்ரூப், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர்பாட்சா, விவசாய அணி மாநில துணைச் செயலாளர் ஷேக் இஸ்மாயில் ஆகியோரும் பங்கேற்றனர். நாகை, திருவாருர், தஞ்சை வடக்கு, தஞ்சை மாநகர், தஞ்சை தெற்கு, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை (கிழக்கு), புதுக்கோட்டை (மேற்கு), பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். இதையொட்டி தஞ்சை மாநகரில் முக்கிய ரவுண்டானக்கள் மற்றும் சாலைகளில் மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. காலை 9.30 முதலே மண்டபம் நிரம்ப
வேலூர் மாவட்ட மஜக நிகழ்ச்சிகள்! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
செப்டம்பர்.05., வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் 04.09.2021 அன்று பங்கேற்றார். பள்ளிக் கொண்டாவில் தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அங்கு ஜமாத்தினரின் அழைப்பை ஏற்று மஸ்ஜிதுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்கள் கொடுத்த கோரிக்கைகளை தொகுதி MLA நந்தக்குமாரின் கவனத்திற்கும், வக்பு தொடர்பான விஷயங்களை வக்பு வாரிய சேர்மன் அப்துல் ரஹ்மானின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக கூறினார். பிறகு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்களும் பங்கேற்றார். புதிய கிளைகளை கட்டமைத்தல், வேலூர் மாநகரில் முழு நேர ஊழியர்களை உருவாக்குதல், விரைவில் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குதல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. பிறகு அங்கு வருகை தந்த குடியாத்தம் நகர நிர்வாகிகளை சந்தித்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களின் பணிகள் தொடர்பான ஆவணங்களை பார்த்து விட்டு, கட்சியின் டாப் 10 கிளைகளில் குடியாத்தம் இருப்பதாக கூறி அவர்களை பாராட்டினார். பிறகு அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்களின் வீட்டுக்கும், சமூக ஊழியர் வேலூர் அவுலியா அவர்களின் வீட்டுக்கும் சென்று நலம்