மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளராக, செய்யது அலி த/பெ; நாகூர் கனி 4/40 நடுத்தெரு, அய்யனார்ஊத்து, கயத்தாறு தாலுகா, தூத்துக்குடி மாவட்டம். அலைபேசி; 8144099920 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; M.H.ஜாபர் அலி #மாநில_செயலாளர் #MJTS 14.09.2021
MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்
அதிரையில் மஜக ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா!
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் அதிராம்பட்டினம் MJTS ஆட்டோ நிறுத்தத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் அதிரை மஜக நகர செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மஜக நகர நிர்வாகிகள் மற்றும் MJTS ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை கண்டித்து நெல்லையில் போராட்டம்.! மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது கண்டன உரையாற்றினார்.!!
நெல்லை.ஜூலை.19., சாமானியர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவை வரலாறு காணாத வகையில் விலை ஏற்றம் அடைந்துள்ளது. விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பேட்டையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமை தாங்கினார், மாவட்ட துணைச் செயலாளர் இரா.முத்துக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். மேலும் மஜக மாநில துணைசெயலாளர் A.R.சாகுல்ஹமீது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தென்மண்டல பொறுப்பாளர் நெல்லை செல்வம், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மஜக மாநில பொருளாளர் அவர்கள் ஒன்றிய அரசு தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சி புரிவதாகவும். தினம் தினம் விலை உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒன்றிய அரசு கட்டுபடுத்த தவறினால், நாடு மிகப்பெரிய மக்கள் எழுச்சி போராட்டங்களை
தாம்பரத்தில் MJTSன் கொடியேற்றிவைத்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி..!
சென்னை.ஜூலை.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு தொழிற்சங்கமான, மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனை எதிரில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தொழிற்சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து பெயர் பலகையை திறந்து வைத்தார். மேலும் தொழிற்சங்கத்தின் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்வின் போது பொதுச் செயலாளர் உடன் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான பல்லாவரம் ஷஃபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர், MJTS மாவட்ட செயலாளர் பி(F)ராங்ளின், அரங்கை முஸ்தபா, MJTS நகர செயலாளர் வீரமுத்த உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #செங்கல்பட்டு_வடக்கு_மாவட்டம் 14.07.2021 https://m.facebook.com/story.php?story_fbid=3584695948296821&id=700424783390633
MJTS தலைமையக நியமன அறிவிப்பு! கோவை வடக்கு மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக A.காஜாமைதீன் த/பெ. அப்துல் ரகுமான் நெ.113/7 நெல்லிதுறை ரோடு எஸ்.எம்.நகர் மேட்டுப்பாளையம் அலைபேசி; 9843761204 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவன், சலீமுதீன் #தலைவர் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் 22.03.2021