திருப்பூர்: ஜன.07 திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் 01.01.2021 அன்று மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் பங்கேற்றார். அவருடன் துணை பொதுச் செயலாளர்கள் சையது அஹமது பாரூக், கோவை சுல்தான் அமீர், ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட முன்னாள் செயலாளர் ஹைதர் அலி,அவர்கள் மீது ஒரு வழக்கு தொடர்பாக கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அதை காரணமாக வைத்து திருப்பூர் காவல்துறை அவர் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்ய முயற்சிக்கும் காவல் துறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு பொறுப்புக் குழு அமைக்கப்பட்டு பொறுப்புக்குழு நிர்வாகிகளாக முஸ்தாக் அகமது, இக்பால், முஜிபூர் ரகுமான், ராயல் பாஷா, கண்ணன், பாபு, மஜீத், ஆகியோரை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால், மாவட்ட துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர்
மஜக செயற்குழு
மஜக மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம்..!! மாநில பொருளாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..!!
நவ.09 மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட துணை செயலாளர் முபாரக், அவர்கள் தலைமையில் 08.11.2020 அன்று மேலூரில் நடைபெற்றது. மேலூர் நகர செயலாளர் செந்தில் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மற்றும் இணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சசிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஒத்தக்கடை பாருக் மற்றும் புதூர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் மஸ்தான், மதுரை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சையத் அலி, மாவட்ட தொழிற்சங்க செயளாலர் பஷீர் கான் மற்றும் ஒன்றிய, நகர , கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் செய்யது மஸ்தான், அவர்கள் நன்றியுரையாற்றினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மதுரை_மாவட்டம் 08.11.2020
எழுச்சியோடு நடைபெற்ற மஜக தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம்!! மாநில பொருளாளர் மற்றும் இணை பொதுச்செயலாளர் பங்கேற்பு!!
தென்காசி:நவ.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் M.பீர் மைதீன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, இணை பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 முன் ஏற்பாடுகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: 1).உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மனிஷா என்ற தலித் பெண்மணியை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். 2).உண்மைச் செய்திகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிக்கையாளரை மிரட்டுவதும் தாக்குவதையும் அரசு தடுத்து நிறுத்தி பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டும். 3).தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனைத்து மக்களும் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் அமைக்க வேண்டும். 4)மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று, விவசாயிகள் கூறும் திருத்தங்களுடன் அதை அமல்படுத்த வேண்டும். 5).கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்த அனைவரின் குடும்பத்திற்கும் இக் கூட்டம்
மஜக திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம்.!தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு.!
திருச்சி.அக்.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று (26.10.2020) மாலை மாவட்டச்செயலாளர் பாபு பாய் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மவ்லா நாசர், இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாய் ரஷாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 முன் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது, மேலும் மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர, கிளை செயலாளர்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருச்சி_மாவட்டம் 26.10.2020