சென்னை.மே.05., காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி ஜெசிந்தா, நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கட்டிருந்தது. இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி அவர்கள் நேரில் சென்று பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது காங்கிரஸ் MLA ராஜேஷ், கிறித்தவ நல்லெண்ண இயக்கம் இனிக்கோ இருதயராஜ் MLA., உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 05.05.2021
இரங்கல்
மஜக முன்னாள் மாநில துணைச்செயலாளர் புதுச்சேரி அப்துல்சமது மரணம்!பொதுச்செயலாளர் மு தமிமுன்அன்சாரி MLA இரங்கல்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் பாண்டிச்சேரி அப்துல் சமது அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். கட்சி தொடங்கிய நாட்களில் தீவிரமாக செயல்பட்ட அவர், தனது சொந்த ஊரான கீழக்கரையிலும் கட்சியை வளர்க்க ஆர்வம் காட்டினார். பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்ட அவர் இன்று கொரோனா வால் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. மஜக ஒரு தீவிர ஊழியரை இழந்திருக்கிறது. இறைவன் அவரின் பிழைகளை மன்னித்து அவரது மறு உலக வாழ்வை சிறப்பிக்க பிரார்த்திக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 24.04.2021
சிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் முன்னெடுத்தவர் விவேக் ….! மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
சின்னக் கலைவாணர் என தமிழ் திரையுலகு கொண்டாடிய #நடிகர்_விவேக் அவர்களின் மரணம் எதிர்பாராதது. எழுத்தாளராக பணிகளை தொடங்கி பின்னர் திரையுலகில் மிளிர்ந்த அவர், தன்னை சமூக சேவையிலும் ஈடுபடுத்திக் கொண்டார். கலைவாணருக்கு பிறகு தமிழ் திரையுலகில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வு கருத்துக்களை முன்னெடுத்தவர் அவர். மெல்லிய அரசியல் கேலியும் அதில் கலந்திருக்கும். ஆழ் துளை கிணற்றுக்குள் குழந்தை விழுவதையும், அதன் காரணங்களையும் நகைச்சுவை ததும்ப அவர் எடுத்துக் கூறி ஒரு படத்தில் நடித்தது அதில் ஒன்று. இப்படி பலவற்றை கூறலாம். முற்போக்கு கருத்துகளை முன்வைத்ததால் அவருக்கு பெரியார் விருது கிடைத்தது. சிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் நிலை நாட்டியவர். அதனால் தான் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சின்னக் கலைவாணர் என அவருக்கு பட்டமளித்து மகிழ்ந்தார். மேதகு முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களின் அறிவுரையை ஏற்று தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கில் மரங்களை நட்ட அவரது சூழலியல் செயல்பாடு அவரது பாராட்டத்தக்க பணிகளில் முதன்மையானதாகும். ஆற்றலும், சிறப்பும் கொண்டவர்களை ஊக்குவிக்கும் அவர், அப்படிப்பட்டவர்கள் தலைவர்களாக இருப்பின் அவர்களை சந்தித்து உரையாடுவதிலும் ஆர்வம் காட்டினார். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக் வான் யூ வை புகழ்ந்ததும்,மலேஷியாவின் முன்னாள்
சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நம் 22 ராணுவ வீரர்கள் – மஜக ஆழ்ந்த இரங்கல்.
சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த நம் 22 ராணுவ வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். அவர்கள் குடும்பத்தினருக்கு #மஜக சார்பில் ஆறுதலை உரித்தாக்குகிறோம். #Chattisgarh #Maoistattack #MjkParty
சிறந்த சமூக செயல்பாட்டாளர் மதுக்கூர் கஃபார்.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!
தஞ்சை.ஏப்.05.,மமகவின் மதுக்கூர் பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் சகோ.கஃபார் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக நேற்று உயிரிழந்தார். இன்று காலை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி அவர்களும், துணைப் பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா அவர்களும், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் அவர்களும் அவரது இல்லத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். கஃபார் ஒரு நேர்மையான சமூக செயல்பாட்டாளர் எனவும், அவரது இளம் வயது மரணம் வருத்தமளிப்பதாகவும் பொதுச்செயலாளர் அவர்கள் குறிப்பிட்டு அவரது மறு உலக வாழ்வு சிறக்க பிரார்த்திப்பதாகவும் கூறினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம் 05.04.21